பக்கம்:சாவி-85.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 நம்மைச் சிரிக்க வைத்து விடுவார். அல்வாத் துண்டு விரல் அளவு இருந்தாலும் இனிக்காமலா போகும்?' என்று கேட்கும் ராணி ஆசிரியர் அ.மா.சாமி அவர்கள் சாவியின் பதில்களில் தான் மிகவும் ரசித்த சிலவற்றைச் சொல்கிறார்: ஒரு கேள்வி: "மஞ்சள் பத்திரிகை எப்படி இருக்கும்?" சாவியின் பதில்: "பச்சையாக இருக்கும்." கேள்வி : "தமிழ்நாட்டில் இ.காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்குமா?" பதில்: "இ.காங்கிரஸ் ஆட்சி மக்களுக்குப் பிடிக்குமா?" கேள்வி: பொன், பெண் - நீங்கள் விரும்புவது எது? Loco : PEN." இப்படி நகைச்சுவையைப் பக்குவமாகக் கையாள்வது சாவிக்குக் கை வந்த கலை. நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள் எப்போதுமே சாவிக்கு நெருக்கமாக இருப்பார்கள். * 'நீங்கள் யாருடைய பரம ரசிகர்?' என்று ஒரு வாசகர் கேட்ட கேள்விக்கு 'மனோரமா என்று சாவி பதில் சொல்லி இருக்கிறார். காரணம்: நகைச்சுவை. சாவியின் நகைச்சுவை பற்றி தினமணி கார்ட்டுனிஸ்ட் மதி: சாவி இதழில் நான் வரைந்திருந்த கார்ட்டுனைப் பார்த்து ரசித்த சாவி அவர்கள் கடற்கரையில் ஒரு கூட்டம் போட்டு உனது கைக்கு ஒரு மோதிரம் போடலாம்னு தோணுது என்று சொன்னார். அடுத்த நிமிடம் 'ஏதோ மனதில் பட்டதைச் சொன்னேன். அதற்காக மோதிரம் எங்கே?'ன்னு கேட்டுடாதே" என்று தமக்கே உரிய டைமிங்கோடு முடித்தார். - 320

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/346&oldid=824822" இலிருந்து மீள்விக்கப்பட்டது