பக்கம்:சாவி-85.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் அதேபோல சாவி இதழில் எழுதியதற்காக சக பத்திரிகை ஆசிரியர் ஒருவருக்கு சன்மானத் தொகையாக ஐந்நூறு ரூபாய்க்கு 'செக் ஒன்றை என் மூலம் கொடுத்தனுப்பினார். அதைப் பெற்றுக் கொண்டவரோ ஆகா! நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. சாவியே கையெழுத்துப் போட்டுத் தந்திருக்கிறார். இதை நான் வங்கியில் டெபாசிட் செய்யப் போவதில்லை. என்னுடன் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளப் போகிறேன் என்றார். மறுநாள் நான் இதை சாவியிடம் தெரிவித்தபோது அடாடா, இது தெரிந்திருந்தால் செக்கை ஐம்பதாயிரம் ரூபாய்க்குக் கொடுத்திருப்பேனே என்றதும் நான் குபிரென்று சிரித்து விட்டேன். அந்த இயல்பான நகைச்சுவையை நான் இவகுவாக ரசித்தேன். தமது மகள் மாலதியுடனும், மருமகன் ராமமூர்த்தியுடனும் ஒருமுறை காரில் போய்க் கொண்டிருந்தார் சாவி. பேச்சு வாக்கில் பெட்ரோல் விலை ஏறிவிட்டதே' என்றார் ராமமூர்த்தி, சற்று கூட யோசிக்காமல் அடுத்த வருடத்தை விட இந்த வருடம் விலை குறைவாக இருக்கிறதே என்று சந்தோஷப் படுங்கள் என்றாராம் சாவி பட்டென்று. அப்பாவின் இந்த ஜோக்கை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது’ என்கிறார் மாலதி. இப்படி தனது இயல்பான நகைச்சுவைப் பேச்சாலும், எழுத்தாலும் பலரையும் கவர்ந்திருப்பவர் சாவி. இந்தப் பண்பின் காரணமாகவே இவருக்கு ஒரு நெருங்கிய வட்டம் - உண்மையான நண்பர்கள் அடங்கிய வட்டம் - உருவாகி இருக்கிறது. தமிழக சட்டப் பேரவையின் முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கராசாராம் அவர்கள் சாவியின் நெருங்கிய நண்பர். நான் எப்போது அவரைப் பார்க்கப் போனாலும் 'என்ன, சாவி எப்படி இருக்கார்?' என்பதுதான் அவர் கேட்கும் முதல் கேள்வியாக இருக்கும். 321

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/347&oldid=824823" இலிருந்து மீள்விக்கப்பட்டது