பக்கம்:சாவி-85.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் முன்னுரையில் கவிஞர் வைரமுத்து குறிப்பிடுகிறார்: "இந்த நாவலை நான் வாசித்தேன் என்பது பொய். இந்த நாவலுக்குள் நான் வசித்தேன் என்பதே மெய்." அதேபோல சாவியின் பழைய கணக்கு புத்தகத்தைப் படித்துவிட்டு வைரமுத்து சாவிக்கு எழுதிய கடிதத்தில் (147.91) எல்லாச் சிப்பிகளிலும் கூட மழை தன்னை விதைத்து விட்டுப் போகலாம்; ஆனால் ஏதாவது ஒரு சிப்பிதான் அதை முத்தாய் முதிர்ந்து கொடுக்க முடியும் என்று குறிப்பிட்டு உங்கள் மூலமாக நாங்கள் பிறக்காத காலத்திலும் வாழ முடிகிறது. என்று எழுதியிருக்கிறார். சாவியைப் பெருமைக்குரிய பெரியவர் என்று போற்றும் கவிஞர் வைரமுத்து, "பேராசிரியர் கல்கியை நான் பார்த்ததில்லை. அக்கிரகாரத்து அதிசய மனிதர் வ.ரா.வை நான் பார்த்ததில்லை. ஆசிரியர் சாவியிடம் இந்த இருவரையும் ஒரு சேரப் பார்க்கிறேன். எழுத்தாளர். எழுத்தாளர்களை உருவாக்கிய எழுத்தாளர். உலவும் காற்றாய், ஓடும் நதியாய் இந்த வயதிலும் இளமை குன்றாத செயல் வீரர். வாழ்க்கையின் பன்முகப்பட்ட வலிகளை - மகிழ்ச்சியைதனது உடம்பிலும் நெஞ்சிலும் தேக்கி வைத்திருக்கும் அனுபவங்களின் கஜானா. எழுத்தில் முரசு கொட்டிய முற்போக்குச் சிந்தனைகளைச் சொந்த வாழ்விலும் கடைப்பிடித்துக் காட்டிய கர்மவீரர். வெற்றிகளை மட்டுமே பகிர்ந்து கொண்டு தோல்விகளைப் பதுக்கி வைத்துக் கொள்ளும் பண்பாட்டாளர்... 323

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/349&oldid=824825" இலிருந்து மீள்விக்கப்பட்டது