பக்கம்:சாவி-85.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. திருப்பாதிரிப்புலியூரில்... பையனுக்கு படிப்பு மீது ஆர்வமில்லாமல் போய்விட்டதே என்று அப்பாவுக்கு வருத்தம்தான். போதாதற்கு வீட்டுக்கு வருகிறவர்கள் எல்லாம் 'பையன் என்ன படிக்கிறான்? படிக்க வைக்கறதுதானே? என்று துக்கம் விசாரிக்க ஆரம்பிக்கவும் அப்பாவுக்கு ரொம்பவும் கவலையாகி விட்டது. இதற்கிடையில் விசுவநாதனுக்கு படிப்பில்தான் அக்கறை இல்லையே தவிர, கலர் மீது அபார மோகம். வண்ணச் சுவரொட்டிகள் எங்கேனும் கண்ணில் பட்டால் போதும்... விளம்பரப் பலகைகள் பக்கம் போனால் போதும், கண்கள் விரிய அந்த வண்ணங்களையே பார்த்து ரசிப்பான். அப்போது ஒருமுறை அங்கே கிராமத்தில் 'தென்னிந்திய ஜீவரட்சக சங்கம்’ என்ற அமைப்பு ஆடு, மாடு, கோழிகளைப் பல வண்ணங்களில் வரைந்து சுவரொட்டிகளாக ஒட்டியிருந்தது. விஷயம் என்னவென்றால் அக்கூரம்மன் கோயில் திருவிழாவின்போது பிராணிகளைப் பலி கொடுப்பது வழக்கம். இந்த வழக்கத்தை எதிர்த்துக் குரல் கொடுத்து வந்த அந்த ஜீவரட்சக சங்கம் ஆடு, மாடு, கோழிகளே 'நாங்கள் என்ன பாவம் செய்தோம். பலி என்ற பெயரில் எங்களை ஏன் சித்திரவதை செய்கிறீர்கள்?’ என்று கேட்பதுபோல சுவரொட்டிகளை ஒட்டியிருந்தது. விசுவநாதன் அந்த் போஸ்டர்களைப் பார்த்து வியக்காத நாளில்லை. 25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/35&oldid=824826" இலிருந்து மீள்விக்கப்பட்டது