பக்கம்:சாவி-85.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 தமிழ்ப் பத்திரிகை உலகின் உருவத்தையும், உள்ளடக்கத்தையும் முன்னெடுத்துச் சென்ற முன்னோடிகளுள் ஒருவர். நகைச்சுவையைச் சமைக்கவும் தெரிந்தவர்; சாப்பிடவும் தெரிந்தவர். மேடையில், உரையாடலில் யாரையும் காயப்படுத்தி விடாத நணி நாகரிகர். முன்னோடிகளைப் போற்றும் பொன்னுள்ளம் கொண்டவர். காந்தி முதல் கலைஞர் வரை உடனிருந்து கட்டுரை எழுதிய உயர்ந்த வரலாற்றுக்கு உரிமையுள்ள ஒரே மனிதர். எல்லாவற்றுக்கும் மேலாய் தன் மனைவி ஜானகி அம்மையார் என்னும் உயர்ந்த பெண்மணியைக் கண்போல் காக்கும் கணவர். தன் பிள்ளைகளுக்கு முதலெழுத்தாக மட்டும் இல்லாமல் முதலாகவும் இருக்கும் மூத்த தந்தை... அவரை நித்தம் ஒரு பொழுதேனும் நினைத்துக் கொள்வதால் நெஞ்சில் ஈரம் கட்டுகிறது. அவர் பல்லாண்டு வாழவேண்டுமென்று என் உதடுகள் எனக்குத் தெரியாமலேயே முணுமுணுத்துக் கொள்கின்றன. ஏதோ ஒரு பாசம், இனந்தெரியாத நேசம் அவர் மீது எனக்கு" என்று முடிக்கிறார். 'எனது 85வது பிறந்த நாளின்போது என் வீட்டுக்கு வந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இருந்து உரையாடி விட்டுப் போனார் கவிஞர் என்று மிகப் பெருமையோடும் பூரிப்போடும் சொல்லி மகிழ்கிறார் சாவி. - 324

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/350&oldid=824827" இலிருந்து மீள்விக்கப்பட்டது