பக்கம்:சாவி-85.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் இருஷ்ண கான சபா செயலாளர் திரு. யக்ஞராமன் சாவியின் ஆப்த நண்பர். சுருதி லயம் பிசகாத இனிய நட்பு. பரீராம் குரூப் டைரக்டர் கண்ணன் சாவியின் நீண்ட நாளைய நண்பர். ரீராம் நிறுவனத்தின் தூண்களில் ஒருவராக இருந்து அதன் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு வரும் கண்ணன் இலக்கியத்தில் மிக்க ஈடுபாடு கொண்டவர். அடக்கமான சாதனையாளர். சாவியிடம் மிகுந்த மதிப்பு கொண்டுள்ளவர். பல நேரங்களில் சாவிக்குப் பெருமை சேர்த்தவர். இரு குடும்பத்தினரும் உறவினர் போல் பழகி வருபவர்கள். பிரபல கர்நாடக இசைக் கலைஞர் மணி கிருஷ்ணசாமி, எம்.கே. என்றழைக்கப்படும் எம்.கிருஷ்ணசாமி, எக்ஸ்பிரஸின் முன்னாள் பொது மேலாளர் டி.கே.தியாகராஜன் (டி.கே.டி.), ஆர்.ராமகிருஷ்ணன், விழாவேந்தன் என்.கே.டி.முத்து, திருமதி சுலோசனாமுத்து, திரு. வெங்கட்ராமன்-திருமதிராமப்ரியா (ஜெயம்) தம்பதியர், முதுபெரும் எழுத்தாளர் பகீரதன், கீதா போதகர் கிரிதாரி பிரசாத், அன்னபூர்ணா உரிமையாளர் தாமோதரசாமி நாயுடு, அண்ணா நகர் ரங்க விலாஸ் திரு. பத்மநாபன் என்று சாவியின் நண்பர்கள் பட்டியல் மிக நீளமானது. பெங்களுரின் புகழ்பெற்ற மாவல்லி டிபன் ரூம் அதிபர் ஹரிச்சந்திரா சாவியின் நெருங்கிய நண்பர். பெங்களூர் போகும் போதெல்லாம் எம்.டி.ஆரில் சாவிக்குத் தரப்படும் தனி மரியாதையை நான் பலமுறை நேரில் கண்டிருக்கிறேன். ஹரிச் சந்திராவின் கள்ளமில்லாத அந்த வெடிச் சிரிப்பு சாவிக்கு மிகவும் பிடிக்கும். சாவியின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் பெங்களுரிலிருந்து எம்.டி.ஆரின் ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் சாவிக்கு வரத் தவறியதில்லை. சமீபத்தில் ஹரிச்சந்திரா மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு சாவி ஆறாத்துயருக்கு ஆளானார். சாவியின் நெருங்கிய நண்பர் வட்டத்தில் வயது 327

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/353&oldid=824830" இலிருந்து மீள்விக்கப்பட்டது