பக்கம்:சாவி-85.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 வித்தியாசம் இராது. இளைய தலைமுறையினர் பலருடன் பழகி அவர்களுடன் முற்போக்கு எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதில் சாவிக்கு ஆர்வம் அதிகம். அப்படிப்பட்டவர்களில் சென்னை மாநகரத் தந்தை மு.க.ஸ்டாலின் அவர்கள் முக்கியமானவர். சாவியின் மீது மிகுந்த மதிப்பும் அன்பும் கொண்டிருப்பவர் ஸ்டாலின். மேயர் பதவியேற்றதும் ஸ்டாலின் அவர்கள் சாவியின் வீட்டுக்கு நேரில் சென்று பொன்னாடை போர்த்தி வாழ்த்துப் பெற்றதை சாவி மிகப் பெருமையோடு சொல்லி மகிழ்கிறார். சாவியின் எண்பத்தைந்தாவது பிறந்த நாளின்போது வீட்டுக்கு வந்து வாழ்த்திய பிரமுகர்களில் மேயர் ஸ்டாலின் அவர்களும், மக்கள் தலைவர் மூப்பனார் அவர்களும் மிக முக்கியமானவர்கள். எண்பத்தைந்து வயதுக்காரரான சாவி அவர்களுக்கு எழுபத்தைந்து வயதிலும் நண்பர்கள் உண்டு. இருபத்தைந்து வயதிலும் நண்பர்கள் உண்டு. இதுவே சாவியின் தனிச்சிறப்பு. 328

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/354&oldid=824831" இலிருந்து மீள்விக்கப்பட்டது