பக்கம்:சாவி-85.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. நல்லதொரு குடும்பம் 'நல்லதொரு குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்' என்றால் சாவி அவர்களின் குடும்பம் சந்தேகமின்றி ஒரு பல்கலைக் கழகம்தான். அந்தக் குடும்பத்தின் ஆதார சுருதி திருமதி ஜானகி அம்மையார் என்றால் மிகையில்லை. எப்போதும் எழுத்தும் பத்திரிகையுமே தன் உலகம் என்று ஒரு தனி உலகத்தில் மிதந்து கொண்டிருக்கும் கணவர். பிரசித்தி பெற்ற அவரது முன்கோபம். இதற்கிடையில் நான்கு மகள்கள், இரண்டு மகன்கள் ஆகியோரை வளர்த்து, படிக்க வைத்து ஆளாக்க வேண்டிய பெரும்பொறுப்பு. இன்றைய வசதிகள் ஏதும் இல்லாத அன்றைய சூழ்நிலையில் திருமதி ஜானகி அம்மையார் இந்தக் குடும்பத்தைப் பேணிக் காத்த பாங்குக்கு சரியான முறையில் சாவி அவர்களாலேயே நன்றி செலுத்தி விட முடியாது. சாவிக்கு எல்லாமே குறித்த நேரத்தில் நடந்தாக வேண்டும். மணமுள்ள காபி, சுவையான உணவு போன்ற சில பழக்கங்களுக்கு கிட்டத்தட்ட அவர் அடிமை. காபி என்றால் அது ஒரு பக்குவமான சூட்டில் இருக்க வேண்டும். அந்தப் பக்குவம் திருமதி சாவிக்கு மட்டுமே தெரியும். காபி குடிக்கும் நேரத்தில் சாவி எதையாவது எழுதிக் கொண்டிருந்தால் காபியைக் கொண்டு வந்து பக்கத்தில் நின்று கொண்டு, இந்தாங்க காபி என்று சொல்லி அவரது எழுத்துத் தவத்தைக் கலைத்து விடாமல் 329

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/355&oldid=824832" இலிருந்து மீள்விக்கப்பட்டது