பக்கம்:சாவி-85.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 காத்திருந்து கணவர் தலை நிமிரும்போது சட்டென்று காபியை நீட்டும் அவரது பண்பைக் கண்டு நான் வியந்திருக்கிறேன். பொறுமை என்றால் அப்படியொரு இமாலயப் பொறுமை, திருமதி ஜானகி அம்மையார் சமையல் கலையில் ஒரு விற்பன்னர். நாமக்கல் கவிஞர், மதுரை சோமு, கிருபானந்த வாரியார், காமராஜர், கலைஞர் போன்ற பல்துறை பிரமுகர்களும் அம்மாவின் கைப்பக்குவத்தைப் பாராட்டாமல் போனதில்ல. சாவி தம்பதிக்கு ஜெயந்தி, ஜெயா, உமா, மாலதி என்று நான்கு பெண்கள். பாலசந்திரன் (பாச்சா), மணி என்று இரண்டு பிள்ளைகள். இவர்களில் உமா, மாலதி, மணி மூவர் மட்டுமே இப்போது இங்கே சென்னையிலும், மற்றவர்கள் வெளிநாடு (அமெரிக்கா, குவைத், நியூஸிலாந்து) களிலும் இருக்கிறார்கள். "அப்பாவுக்கு எப்போதுமே பத்திரிகை ஒன்றுதான் பேச்சு, மூச்சு எல்லாம். தூக்கத்தில் கூட அநேகமாக அவரது கனவுகள் தம் எழுத்தைப் பற்றியும், பத்திரிகை பற்றியும்தான் இருக்கும். சின்ன வயதில் நாங்கள் என்ன படிக்கிறோம், எங்கே படிக்கி றோம் என்பது கூட அவருக்குத் தெரியாது. வீட்டுக்கு வரும் அவரது நண்பர்கள் எங்கள் படிப்பைப் பற்றி விசாரித்தால் அப்பா அவர்கள் எதிரிலேயே எங்களைக் கூப்பிட்டு விவரங்களைச் சொல்லச் சொல்வார். அப்போது எங்களுக்கு சிரிப்புதான் வரும்' என்கிறார் மூத்த மகள் ஜெயந்தி. அவரது கணவர் விசுவநாதன் பொறியியல் பட்டதாரி. குவைத் நாட்டில் நீண்ட காலமாகப் பணியாற்றி வருகிறார். தன் முதல் மாப்பிள்ளை விசுவநாதன் பற்றி சாவி சொல்கிறார்: - - . . . - "ரொம்பவும் அடக்கமானவர். உழைப்பால் உயர்ந்தவர். நகைச்சுவையோடு பேசும் திறன் வாய்ந்தவர். அவரது நகைச்சுவைப் 330

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/356&oldid=824833" இலிருந்து மீள்விக்கப்பட்டது