பக்கம்:சாவி-85.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் பேச்சை நான் ரொம்பவும் ரசிப்பேன். ரசம் நன்றாக அமைந்து விட்டால் அதை ரசம் என்று சொல்ல மாட்டார். ரஜம்' என்பார். இப்படிச் சின்னச் சின்ன மின்னல் ஜோக்குகள் அவரிடமிருந்து அடிக்கடி பளிச்சிடும்." ஜெயந்தி விசுவநாதனுக்கு அருண், விஜய் என்று இரண்டு மகன்கள். இருவரும் இப்போது அமெரிக்காவில் பொறியாளர்கள். அடுத்த மகள் ஜெயா. இவர் சில காலம் கோபுலுவின் Adwave விளம்பர நிறுவனத்தில் ஆர்ட்டிஸ்டாக இருந்து பயிற்சி பெற்றார். இப்போது நியூஸிலாந்தில் கணவர் அர்த்தநாரியுடன் வசித்து வருகிறார். கெளதம், ஆர்த்தி, அமிதாப் மும்மணிகளும் இவர்களின் செல்வங்கள். ஜெயாவின் வாழ்க்கையில் விதி விளையாடிய சோக சம்பவம் ஒன்று உண்டு. ஜெயாவின் கணவர் ராமதாஸ் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான மஸ்கட்டில் வேலை பார்த்து வந்தார். திருமணமான புதிதில் தலை தீபாவளிக்கு சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். மஸ்கட்டிலிருந்து பம்பாய் வந்து அங்கிருந்து சென்னைக்கு விமானம் ஏறிப் புறப்பட்ட சில நிமிடங்களில் நிகழ்ந்த மிகக் கோரமான விபத்தில் உயிரிழந்தார். ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பணியாற்றிக் கொண்டிருந்த அர்த்தநாரி என்பவரின் மனைவியும் அதே விபத்தில் உயிரிழக்க நேரிட்டது. சாவியின் மாப்பிள்ளை ராமதாஸ் அந்த விபத்தில் உயிரிழந்த செய்தியைக் கேள்விப்பட்ட அர்த்தநாரி ஓராண்டு காலத்துக்குப் பின் சாவி அவர்களைத் தொடர்பு கொண்டு (நண்பர் ராமசாமி என்பவர் மூலம்) உங்கள் மாப்பிள்ளை விமான விபத்தில் போய்விட்ட செய்தி அறிந்தேன். என் மனைவியும் அதே விபத்தில் உயிரிழந்த செய்தி தங்களுக்குத் தெரிந்திருக்கலாம். தங்கள் மாப்பிள்ளையையும் என் மனைவியையும் பலி வாங்கிய அந்த விதி என்னையும் தங்கள் மகளையும் 331

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/357&oldid=824834" இலிருந்து மீள்விக்கப்பட்டது