பக்கம்:சாவி-85.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 ஏன் சேர்த்து வைக்கக் கூடாது?’ என்று கேட்டிருந்தார். சாவி முற்போக்கு எண்ணங்கள் கொண்டவர். அதனால் உடனே அர்த்தநாரியை சென்னைக்குப் புறப்பட்டு வரச்செய்து தம் மகள் ஜெயாவைப் பார்த்துப் பேசிய பின் திருமணம் பற்றி முடிவு செய்யுங்கள் என்று பதில் சொல்லி அனுப்பினார் ஒரு பிராமணக் குடும்பத்தில் புரட்சித் திருமணமாக ஜெயா - அர்த்தநாரி திருமணம் நடந்தேறியது. இத்திருமணம் பற்றி குமுதத்தில் பால்யூ எழுதிய கட்டுரையைப் பற்றி இன்னும் சிலர் நினைவில் வைத்திருந்து பேசுவதுண்டு. இயக்குநர் கே.பாலசந்தர் இல்லத்தில் இப்படியொரு திருமணம் நடைபெற்ற போது இத்திருமணம் நடைபெற நான் முன் மாதிரியாகக் கொண்டது சாவி மகள் ஜெயாவின் திருமணம்தான் என்று வெளிப்படை யாகவே அந்த திருமண விழாவில் பேசினார். பாலசந்தர் இல்லத் திருமணம் சாவிக்குப் பெருமகிழ்ச்சியைத் தந்தது. ஜெயாவின் கணவர் அர்த்தநாரி ஒர் அறிவு ஜீவி. ஆக்லாந்தில் பல்கலைக் கழகப் பேராசிரியராக இருக்கிறார். அவ்வப்போது கவிதைகள், கதை, கட்டுரைகள் எழுதுவது இவர் பொழுது போக்கு. எழுத்தை மட்டும் இவர் முழு நேரப் பணியாகக் கொண்டிருந்தால் இன்று தமிழில் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்ந்திருப்பார். சாவிக்குத் தன் மாப்பிள்ளை அர்த்தநாரியின் எழுத்துத் திறமை வீணாய்ப் போகிறதே என்ற வருத்தம் எப்போதும் உண்டு. 'ம்ாப்பிள்ளை என்பதற்காகச் சொல்லவில்லை. அவரிடம் நான் கண்ட அந்த எழுத்துப் பொறியை வைத்துச் சொல்கிறேன்" என்கிறார் சாவி. ஒரு சமயம் அர்த்தநாரிக்கு சாவி எழுதிய கடிதம் ஒன்றில் உங்களுக்குள் இருக்கும் எழுத்தாளரை நீங்கள் அடக்கி வைத்திருப்பது மகா பாவம் என்று குறிப்பிட்டுள்ளார். 332

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/358&oldid=824835" இலிருந்து மீள்விக்கப்பட்டது