பக்கம்:சாவி-85.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 வைப்பது என்ற யோசனையில் ஆழ்ந்தேன். நேரம் பறந்து கொண்டிருந்தது. காலையில் ஆசிரியரிடம் நான் எழுதி இருந்த கட்டுரையைக் கொடுத்தேன். . அட, ரெடியா நேரா கம்போஸிங்குக்கு அனுப்பிடறேன் என்று சொல்லியபடி காரில் ஏறினார். நான் எழுதிய இரங்கல் அச்சில் ஏறுமா என்ற கவலையில், ஆசிரியர் அதை அங்கீகரிக்க வேண்டுமே என்ற கவலையில் ஆழ்ந்திருந்தேன். மாலையில் திரும்பி வந்த ஆசிரியர் 'எங்கே அர்த்தநாரி, ஆளையே காணோம்? என்று கேட்டுக் கொண்டே வந்த ஆசிரியர் அருமையாக எழுதி இருக்கார் என்று பாராட்டினார். இரவில் வாங்கினால் என்ன? இரவல் வாங்க வில்லையே!” நல்ல வரி. நீங்க நிறைய எழுதணும்' என்றார். அன்று மவுண்ட் பேட்டன் மறைவுக்காகச் சந்தோஷப் பட்டது நான் ஒருவனாகத்தான் இருக்கும்! இன்னொரு சமயம் நான் எழுதித் தந்த ஒரு கட்டுரையைப் படித்துப் பார்த்த சாவி அவர்கள் இது என்ன எழுதி இருக்கிறீர்கள்? புரியலையே?’ என்றார். - அதற்கு ஒரு விளக்க உரையைச் சொன்னதும் அப்படியா அது சரி, இப்படியே ஒவ்வொரு வாசகராகப் போய் விளக்கம் கொடுக்கணும்னா நிறையச் செலவாகுமே!’ என்றார் கிண்டலாக, ஆசிரியர் சாவி எனக்கு பத்திரிகை ஆசிரியர் மட்டுமல்ல; எத்தனை பெரிய இடியே விழுந்தாலும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் மனம் தளராமல் ஈடுபடும் வித்தையைக் கற்றுக் கொடுத்த ஆசானும் அவர்தான். எதை 334

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/360&oldid=824838" இலிருந்து மீள்விக்கப்பட்டது