பக்கம்:சாவி-85.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் இழந்தாலும் மீட்டு விடலாம். தைரியத்தை மட்டும் விடக் கூடாது என்பார். சொல்வதோடு மட்டுமல்ல; பத்திரிகை நடத்துவதிலும், வாழ்க்கையிலும், பல கஷ்டங்களும், நஷ்டங்களும் வந்தபோதெல்லாம் அவர் செயலும் அப்படித்தான் இருந்தது." ஜெயாவுக்கு ஏற்பட்ட சோதனை போன்று சாவியின் மூன்றாவது மகள் உமாவுக்கும் (ஊர்மிளா) ஏற்பட்டது. உமாவின் வாழ்க்கையில் விதி விபரீதமாக விளையாடி விட்டது. கணவர் ராஜாராமுடன் டெல்லியில் வசித்து வந்தபோதுதான் ராஜாராம் இருதயம் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. ஓயாமல் இருமிக் கொண்டிருந்தார். சாவியின் நண்பர் டாக்டர் கோவிந்தராஜுலு சோதித்துப் பார்த்துவிட்டு பெரம்பூர் ரெயில்வே ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட ஏற்பாடு செய்தார். உடனே ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை மேற்கொண்டார்கள். டாக்டர் செரியன் ராஜாராமைப் பூரணமாகச் சோதித்து, ஆபரேஷன் செய்தாக வேண்டும் என்று முடிவாகச் சொல்லி ஆபரேஷனையும் அடுத்த நாளே செய்து முடித்தார். ஆபரேஷன் வெற்றி பெறாமல் ராஜாராம் உயிர் ஆஸ்பத்திரியிலேயே பிரிந்து விட்டது. அன்றே உமாவின் வாழ்க்கை இருள் சூழ்ந்ததாயிற்று. மிக இளம் வயதில் கணவனை இழந்துவிட்ட தன் மகள் வாழ்க்கை சாவியைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. இரண்டொரு வருடங்களுக்குள் ராணுவத்தில் கர்னலாக இருந்த பிரசாத் அவர்களுக்கு உமாவை மணம் முடித்து வைத்தார். இதற்குப் பேருதவியாக இருந்த கர்னல் பிரசாத் அவர்களின் தங்கையின் கணவர் திரு. ராஜன் அவர்களுக்குத் தாம் என்றென்றும் நன்றிக் கடன்பட்டிருப்பதாகச் சொல்கிறார் சாவி. கர்னல் பிரசாத் அவர்களுக்கு அதுதான் முதல் திருமணம். அவரது பெரிய மனதும், பெருந்தன்மையான போக்கும் சாவியின் புரட்சி எண்ணங்களும் ஒத்துப் போயின. திருமணமே வேண்டாம் 335

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/361&oldid=824839" இலிருந்து மீள்விக்கப்பட்டது