பக்கம்:சாவி-85.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 என்று சொல்லிக் கொண்டிருந்த பிரசாத் அவர்களை திருமணத் துக்குச் சம்மதிக்க வைத்தவர் அவருடைய சகோதரி சந்தோஷும், சந்தோஷின் கணவரும்தான். பிறகு உமாவை வந்து பார்த்த பிரசாத் சம்மதம் தெரிவித்ததும் உமா - பிரசாத் திருமணம் அண்ணா நகரிலேயே மிக எளிய முறையில் நடந்தேறியது. பிரசாத் இப்போது ராணுவத்திலிருந்து விலகி மகேந்திரா அண்ட் மகேந்திராவில் பொது மேலாளராக உயர் பதவி வகித்து வருகிறார். உமாவின் மகன் நவீன் கேட்டரிங் படித்துப் பட்டம் பெற்று இப்போது சென்னையில் தாஜ் குரூப்"பில் பணியாற்றி வருகிறார். பன்னிரண்டே வயது நிரம்பிய மகள் வைஷ்ணவிக்கு இதற்குள்ளாகவே இரத்தத்தில் ராணுவம் ஓடுகிறது. நீச்சல், சைக்கிள் ஒட்டுவது, குதிரையேற்றம் போன்றவற்றுடன் பரத நாட்டியம், பியானோ போன்ற கலைகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். “என் வாழ்க்கையில் அர்த்தநாரி, பிரசாத் இருவரையும் நான் மறக்க முடியாது' என்று பாசமிகு நன்றியுடன் சாவி குறிப்பிடும்போது அவர் கண்கள் பனிக்கின்றன. நாலாவது மகள் மாலதியும், மருமகன் ராமமூர்த்தியும் இப்போது சென்னையில் வசிக்கிறார்கள். ராமமூர்த்தி அனுபவம் மிக்க ஒரு சார்ட்டர்ட் அக்கெளண்டன்ட் 'மாப்பிள்ளை ராமமூர்த்தி உழைக்க அஞ்சாதவர். மென்மையானவர். தெய்வ பக்தி மிக்கவர். எதையும் ஆராய்ந்து அணுகும் அவரது அமைதியான, சாத்வீகமான போக்கு எனக்கு ரொம்பவும் பிடிக்கும். என்கிறார் சாவி. மாலதி, ராமமூர்த்திக்கு இரண்டு பெண்கள். மூத்தவள் ரத்தி. இளையவள் திவ்யா. ரத்தி கல்லூரியில் முதலாண்டு. திவ்யா பத்தாம் வகுப்பில். இருவருமே புத்திசாலிப் பெண்கள். சாவியின் மகன் பாச்சா என்கிற பாலசந்திரன் ஒரு 336

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/362&oldid=824840" இலிருந்து மீள்விக்கப்பட்டது