பக்கம்:சாவி-85.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் பெருமக்கள் என்று அவரது நண்பர் குழாமின் எல்லை விரிந்து பரந்த ஒன்று. அவர்கள் வந்து மாமாவிடம் உரையாடுவதைக் கேட்கும் வாய்ப்பு எனக்கு அடிக்கடி கிடைக்கும். அப்போதெல்லாம் நான் மாமாவை எண்ணிப் பெருமைப்படுவேன். எனக்கு பெங்களுரில் வாசம். முப்பதாண்டுகளுக்கும் மேலாக 'பெல் நிறுவனத்தில் பணிபுரிந்த பின் ஒய்வு பெற்றுள்ளேன். மாமா அடிக்கடி பெங்களூர் வருவார். அவருக்கு பெங்களூர் ரொம்பப் பிடிக்கும். மாமாவுக்கு கப்பன் பார்க்"கில் கற்பனைகள் உருவாகும். நண்பர்களோடு லால் பாக் பூங்காவில் அமர்ந்தால் ஆகாச வெடி போல் நகைச்சுவை மலர்ந்து உதிரும்' என்கிறார் மெளலி. இப்படி சாவி என்ற ஆணி வேரில் வளர்ந்தோங்கிய ஆலமரமாய் அவரது குடும்பம் பல்கித் தழைத்து விழுதுகள் விட்டுப் பலருக்கு நிழல் தந்து கொண்டிருக்கிறது. 339

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/365&oldid=824843" இலிருந்து மீள்விக்கப்பட்டது