பக்கம்:சாவி-85.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் இளம்பு முன் இரண்டு துச்சாதனர்கள் வந்து என் உடைகளைக் களைந்து விட்டு ஒரு சின்ன டவலை மட்டும் என் இடுப்பில் சுற்றி விட்டுப் போகிறார்கள். ஆபரேஷன் தியேட்டரில் சில பூரீதேவிகளும், அம்பிகாக்களும் நர்ஸ் வேடத்தில் அங்குமிங்கும் பரபரப்போடு அலைவதைப் பார்க்கிறேன். பச்சை நிற அங்கிகளில் டாக்டர்களும் நர்ஸுகளும் சூழ்ந்து நிற்கின்றனர். தியேட்டர் முழுவதும் சூரிய வெள்ளம். ஆயுதங்களின் பளபளப்பு. என்னை ஸ்ட்ரெச்சளிலிருந்து ஆபரேஷன் மேஜைக்கு மாற்றியதும் என் இடுப்பைச் சுற்றியிருந்த அந்தச் சிறிய துண்டும் அகற்றப்படுகிறது. என் நிர்வாணம் எனக்கு ஒரு கூச்சத்தை ஏற்படுத்துகிறது. சுற்றிலும் உள்ள பெண்கள் பார்க்கிறார்களே என்று வெட்கம் பிடுங்கித் தின்கிறது. எமனோடு உயிர்ப் போராட்டத்துக்கு நேரம் குறித்தாயிற்று. இன்னும் சில மணி நேரங்களில் என் தலைவிதி நிர்ணயிக்கப் படும் கட்டம். பிழைத்து வரப் போகிறேனா, அல்லது இந்த உலகத்திலிருந்தே விடுதலை பெறப் போகிறேனா என்ற கேள்விக் குறியோடு களம் புகுந்துள்ள நேரம். ஆனாலும் என் உயிர்ப் பிரசினையை மீறிக் கொண்டு மானப் பிரசினை மேலோங்கி நிற்கிறதே, அதுதான் விந்தை இதற்குள் யாரோ ஒரு சிறு துணியால் என் மானத்தைக் காப்பாற்றுகிறார்கள். மனம் நிம்மதி பெறுகிறது. அப்புறம் என்னென்னவோ நடக்கிறது. நான் அரை மயக்கத்தில் இருக்கிறேன். வண்டியைத் தள்ளுகிறார்கள். மார்புக்கு மேலே மண்டை விளக்கை நகர்த்தி அட்ஜஸ்ட் செய்கிறார்கள். கத்திரிகளும் கத்திகளும் மின்னுகின்றன. ஊசி போடுகிறார்கள். இதோ, அனஸ்தேஷியா கொடுக்.. நான் கொஞ்சம் கொஞ்சமாக நினைவு இழந்து 341

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/367&oldid=824845" இலிருந்து மீள்விக்கப்பட்டது