பக்கம்:சாவி-85.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் இதயத்தில் அல்லவா ஆபரேஷன்? கால்களில் ஏன் வலிக்கிறது? கால்களைப் பார்க்க வேண்டும் போல் ஓர் உந்துதல். பார்த்தால் இரண்டு கால்களிலும் கணுக்காலிலிருந்து முழங்கால் வரை கிட்டத்தட்ட ஒர் அடி நீளத்துக்கு நீண்ட தையல் போடப் பட்டிருந்தது. காலில் ஏன் தையல்? இங்கிருந்துதான் வெய்ன் எடுத்து அடைபட்டிருந்த ரத்தக் குழாய்களுக்குப் பக்கத்தில் பை - பாஸ் குழாய் போட்டுச் சீரான ரத்த ஓட்டத்துக்கு வழி செய்திருக்கிறார்கள். மூன்று நாள் கழித்து என்னைப் பார்க்க நண்பர் சுஜாதா வந்திருந்தார். நான்தான் அதிகம் பேசினேன். என் ஆபரேஷன் அனுபவங்களை அவரிடம் எழுத்தாளர் கோணத்தில் சொன்னேன். 'இவ்வளவு பெரிய சமாசாரத்தை ரொம்ப லேசாக்கி இத்தனை நகைச்சுவையோடு சொல்கிறீர்களே! என்று வியந்து சிரித்தார் சுஜாதா என் பேச்சு அவருக்கு புதுத்தெம்பையும் தைரியத்தையும் அளித்திருக்க வேண்டும். அப்புறம் ஏழெட்டு நாட்களே ஆஸ்பத்திரியில் இருந்தேன். டாக்டர் கிரிநாத் வந்து, யூ ஆர் ஆல்ரைட் உங்களை டிஸ்சார்ஜ் செய்கிறேன். நீங்கள் வீட்டுக்குப் போகலாம்' என்றார். பிறவியிலேயே எனக்கு அமைந்துவிட்ட மனத் திட்பம், மனைவியின் மாங்கல்ய பலம், ஏழுமலையானுடைய அருள் மூன்றும் சேர்ந்து என்னைக் காப்பாற்றி விட்டன." ஆபரேஷன் செய்து கொண்டு மருத்துவமனையில் இருந்த போதும் சாவி சும்மா ஒய்வு எடுத்துக் கொண்டிருக்கவில்லை. அவரைப் பார்க்கப் போன எழுத்தாளர் ஸுஜாதா விஜயராகவன் தான் கண்ட காட்சியை விவரிக்கிறார்: சாவி அவர்களுக்கு பை-பாஸ் சர்ஜரி நடைபெற்று ஒரு வாரம் கூட ஆகியிருக்காது. அவரைப் போய்ப் பார்க்கலாமா, 343

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/369&oldid=824847" இலிருந்து மீள்விக்கப்பட்டது