பக்கம்:சாவி-85.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் அம்மாவுக்குத் தன் மகன் ஆரணியில் போய்ப் படிப்பதில் விருப்பம் இருந்தாலும் அப்பா என்ன சொல்லுவாரோ? என்று யோசித்தார். 'அங்கே போய் இவன் எங்கே ஒழுங்காகப் படிக்கப் போகிறான்? குரங்கு போல மரத்துக்கு மரம் தாவிக் கொண்டி ருப்பான். இவனாவது படிக்கிறதாவது...' என்றார் அப்பா. தொடர்ந்து நடைபெற்ற சமாதானப் பேச்சு வார்த்தைகளில் அப்பாவின் மனம் மாறியது. 'சரி, இவன் ஆரணியில் போய் படிக்கட்டும். செலவை ஈடுகட்ட அவர்களுக்கு அவ்வப்போது ஒரு மூட்டை அரிசி அனுப்பி விடலாம் என்று முடிவானது. - மறுநாள் சனிக்கிழமை. விடியற்காலம். நல்ல நேரம். பேய் மழை பெய்து ரோடு ஒரமெல்லாம் தண்ணீர் தேங்கியிருந்தது. காலை ஐந்து மணிக்கெல்லாம் விசுவநாதனும் அவன் அப்பாவும் புறப்படத் தயாரானார்கள். அம்மா தயிர் சாதம் பிசைந்து கட்டிக் கொடுத்தாள். 'இவ்வளவு காலையில் சாப்பிடப் பிடிக்காது. வழியில எங்காவது சாப்பிடட்டும்.' தந்தையும் மகனும் கொஞ்ச தூரம் நடந்தே போனார்கள். வழியில் ஒரு குட்டை அருகே சாப்பிட்டுவிட்டு காலி டிபன் பாக்ஸை அப்பாவிடமே கொடுத்து அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டு, விசுவநாதன் தனியாகவே நடந்து ஆரணி போய்ச் சேர்ந்தான். ஆரணியில் போர்டு ஹைஸ்கூலில் இவனைச் சோதித்த தலைமையாசிரியர் பிரம்மதேசம் சுப்பிரமணிய ஐயர் அட, பையன் புத்திசாலியா இருக்கானே! என்று நற்சான்றிதழ் தந்து ஆறாம் வகுப்பில் சேர்த்துக் கொண்டார். நான்காவதிலிருந்து 27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/37&oldid=824848" இலிருந்து மீள்விக்கப்பட்டது