பக்கம்:சாவி-85.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 டாக்டர்கள் அனுமதிப்பார்களா என்றெல்லாம் விசாரித்துத் தெரிந்து கொண்டு அப்பல்லோ மருத்துவமனைக்குப் போனேன். அவரைத் தூக்கத்திலும், ஒய்விலும் வைத்திருப்பார்கள் என்பதால் அவருடைய மனைவி, மக்களைப் பார்த்துப் பேசிவிட்டு வரலாம் என்ற எண்ணத்தில், தயக்கத்தோடு அறைக் கதவை மெல்லத் திறந்தேன். 'யார்? ஸ்-ஜாதாவா? வாங்கோ வாங்கோ.: சாட்சாத் சாவி சாரின் குரல்! கற்றை கற்றையாக மடி நிறைய ப்ரூஃப் பார்க்க வேண்டிய பக்கங்கள். 'மூன்று நாட்களாகவே ப்ரூஃப் பார்க்கத் தொடங்கி விட்டார் என்று கவலையுடன் சிரித்தார் மாமி. பத்திரிகை மற்றவர்களுக்கு ஒரு தொழிலாக இருக்கலாம். சாவிக்கு அது மூச்சு." தன் உடல்நிலை பற்றிக் கவலைப்படாமல் வருவது வரட்டும், பார்த்துக் கொள்வோம்' என்று மிக தைரியமாக இருப்பதால்தான் பை-பாஸ் ஆகி பலப்பல ஆண்டுகள் ஆகியும் சாவிக்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருக்கிறது என்று நான் எண்ணுகிறேன். 344

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/370&oldid=824849" இலிருந்து மீள்விக்கப்பட்டது