பக்கம்:சாவி-85.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 செய்திகளின் கீழ் அடிக்கோடிட்டு குறிப்பெடுத்து வைக்கிறார். ஒய்வு நேரங்களில் கதை, கட்டுரைகள் எழுதி வருகிறார். சிற்சில நாட்கள் மாலை வேளைகளில் முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சொற்பொழிவு நிகழ்த்தி விட்டு வருகிறார். டிசம்பர் வந்து விட்டால் தேனியின் சுறுசுறுப்புதான். இசை விழா சீசன் சாவியின் மனதுக்கு இசைந்த சீசன். மியூஸிக் அகாடமியும், நாரத கான சபாவும், கிருஷ்ண கான சபாவும் சொந்த வீடுகள் போல. அநேகமாக அங்கேதான் சீசனின் போது இவரது குடியிருப்பு. வாழ்நாள் முழுதும் எதிர் நீச்சல் போட்ட களைப்பு தெரியாத முகம். வாழ்க்கையை ரசிக்க வயது ஒரு பொருட்டே அல்ல என்று தீர்மானமாய் நம்புகின்ற ஒரு திடம். நான் சாவி அவர்களைச் சந்திக்காத நாட்கள் அபூர்வமே. அதுவும் சமீப காலமாக இந்த சாவி-85 என்ற நூல் சம்பந்தமாக நான் இவரை தினமும் சந்திக்கத் தவறியதில்லை. இவரிடமிருந்து ஊக்கம் பெறாத நேரமும் இல்லை. முதுமை அடைவதை யாராலும் தவிர்க்க முடியாதுதான். எல்லோரும் ஒரு காலத்தில் முதுமை அடையத்தான் வேண்டும் என்றாலும் சிலர் மட்டுமே கண்ணியமாக முதுமை அடைகிறார்கள். ஆங்கிலத்தில் ஏஜிங் கிரேஸ்ஃபுல்லி என்பார்களே, சாவி அதற்குச் சிறந்த உதாரணம். 346

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/372&oldid=824851" இலிருந்து மீள்விக்கப்பட்டது