பக்கம்:சாவி-85.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 ஆறாவதுக்கு மாறியபோது ஏதோ கிளை விட்டுக் கிளைத் தாவுவது போல இருந்தது விசுவநாதனுக்கு! சந்தான கோபாலய்யர் என்பவர் கணக்கு டீச்சர் கணக்கில் நல்ல சூரத்தனம் வாய்த்திருந்தது விசுவநாதனுக்கு. அடுத்த சில மாதங்களுக்குள்ளாகவே மாம்பாக்கத்தில் நிலத்தை குத்தகைக்கு விட்டுவிட்டு விசுவநாதனின் தந்தையும் தாயும் ஆரணிக்கே குடி போய் விட்டார்கள். - கணக்கில் நூற்றுக்கு நூற்றைந்து மதிப்பெண்கள் வாங்கினான் விசுவநாதன். சந்தான கோபாலய்யர் என்ன சாஸ்திரிகளே! உங்க பையன் மகா புத்திசாலியா இருக்கிறான். கணக்கில் நூற்றைந்து மார்க்காக்கும் என்று அப்பாவிடம் தன்னைப் பற்றி பெருமையாகச் சொன்னதாகக் கேள்விப்பட்டபோது விசுவநாதன் ஏதோ வானத்தில் பறப்பது போல் உணர்ந்தான். அந்த வயதிலும் அப்பா சும்மா இராமல் அடிக்கடி ராமாயண உபந்நியாசங்கள் நிகழ்த்தி வருவதைப் பார்த்த விசுவ நாதனுக்குத் தானும் அப்பாவைப் போல் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் என்று தோன்றியது. ‘வாழ்க்கையில் எப்போதும் சோர்வுக்கு இடம் தந்து விடக்கூடாது என்பது ஒரு கொள்கையாகவே அவன் மனதில் பதிந்து போனது. இந்தச் சமயத்தில் சென்னை வில்லிவாக்கத்தில் சிங்காரம் பிள்ளை உயர்நிலைப் பள்ளியிலிருந்து விசுவநாதனின் தந்தை சாமா சுப்பிரமணிய சாஸ்திரிக்கு ஒரு தகவல் வந்தது. "எங்கள் பள்ளியில் புதிதாக சமஸ்கிருதப் பாடப் பிரிவு தொடங்கியிருக்கிறோம். தாங்கள் வந்து ஆசிரியராகச் சேர்ந்து பணியாற்ற முடியுமா?" என்று அந்தப் பள்ளிக்கூட நிர்வாகி 28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/38&oldid=824853" இலிருந்து மீள்விக்கப்பட்டது