பக்கம்:சாவி-85.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் வெங்கடராயர் கேட்டிருந்தார். சாஸ்திரிகள் அடுத்த மாதமே குடும்பத்தை வில்லிவாக்கத்துக்கு மாற்றி விட்டார். அப்பாவுடன் விசுவநாதனும் வில்லிவாக்கம் போய்ச் சேர்ந்தான். அப்பா வேலைக்குச் சேர்ந்த சிங்காரம் பிள்ளை ஹைஸ்கூலிலேயே இவன் அட்மிஷனுக்குத் தேர்வு வைத்தார்கள். அங்கேயும் விசுவநாதனின் திறமையைக் கண்டு வியந்த ஹெட் மாஸ்டர் இவனை எட்டாம் வகுப்பில் சேர்த்துக் கொண்டார். அப்போது ஆறிலிருந்து எட்டுக்குத் தாவினான். அதற்கு மேல் தாவ அந்தப் பள்ளிக்கூடத்தில் வகுப்பு இல்லை. அப்புறம் பெரம்பூரில் கலவலகண்ணன் உயர்நிலைப் பள்ளியில் ஃபோர்த் ஃபார்ம் சேர்ந்த போதுதான் விசுவ நாதனுக்கு ஒரு வில்லன் வந்து முளைத்தான். அந்த வில்லன்: இங்கிலீஷ் ஹிஸ்டரி. அவனுக்கு அதில் எதுவுமே புரியவில்லை. ஏற்கெனவே, அவனுக்கும் ஆங்கிலத்துக்கும் ஏழாம் பொருத்தம். அதிலும் அந்த இங்கிலீஷ் ஹிஸ்டரி பாடம் அவனைப் பாடாய்ப்படுத்தியது. படிப்பைத் தொடர்வது வீண்வேலை என்று முடிவெடுத்தான். மூன்று மாதம் கூட முழுசாக ஆகவில்லை. அப்போது பள்ளிக்கூட டெர்ம் ஃபீஸ் ஆறே கால் ரூபாய். அப்பா தந்த அந்த ஆறேகால் ரூபாயை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு 'டாட்டா' சொல்லி விட்டு ரயில் ஏறி விட்டான். எங்கே போகப் போகிறோம்? தெரியாது. என்ன செய்யப் போகிறோம்? அதுவும் தெரியாது. மனம் போனபோக்கில் தஞ்சாவூர், திருச்சி, மதுரை, 29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/39&oldid=824854" இலிருந்து மீள்விக்கப்பட்டது