பக்கம்:சாவி-85.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 மானாமதுரை வரை பயணம் செய்தான். கையிலிருந்த காகம் அநேகமாய்த் தீர்ந்து போயிற்று. அங்கிருந்து திருப்பாதிரிப்புலியூர் திரும்பினான். அங்கே அவன் அத்தை மகன் சுப்பராயன் படித்து வந்த வேத பாட சாலையில் தானும் சேரலாமே என்று ஒரு சின்ன ஆசை 'விசுவநாதா, எங்க வேத பாடசாலையில் எல்லோருக்கும் சாப்பாடு இலவசம் என்று சுப்பராயன் எப்போதோ சொன்னது நினைவுக்கு வந்தது. விசுவநாதன் அங்கே போன போது கூடவே அவன் துரதிர்ஷ்டமும் அவனைத் துரத்த, வேத பாடசாலைக்கு அப்போது கோடை விடுமுறை மாணவர்கள் எல்லோருமே தங்கள் சொந்த ஊருக்குப் போயிருந்தார்கள். திரும்பிப் போக காசில்லை. வேறுவழியின்றி அந்த வேத பாடசாலையின் விசாலமான திண்ணையில் போய்ப் படுத்துக் கொண்டான். சட்டைப் பையைத் துழாவினால் ஒரே ஒரு தம்படி (அப்போது ரூபாய்க்கு 192 தம்படி) மட்டுமே மிச்சமிருந்தது. பசிக்கொடுமை வேறு. அன்றிரவு திண்ணையில் படுத்துத் தூங்கி விட்டு மறுநாள் காலை குளிப்பதற்காக அருகிலிருந்த ஆற்றை நோக்கி நடந்தான். பாடசாலைக்கு எதிரில் கோவிலுக்குப் பக்கத்தில் யாரோ ஒருவர் உயரமாக சாரம் கட்டி அதன்மேல் நின்று கொண்டு டோங்ரே பாலாமிர்தம்' என்று கலர் கலராய் விளம்பர போர்டு எழுதிக் கொண்டிருந்தார். - ஒவியம், கலர் என்றால் அலட்சியமாக விட்டு விடுவானா? குளிக்கப் புறப்பட்டதை மறந்து அப்படியே நின்று, அந்த விளம்பர போர்டு கலைஞனையும், அந்த வர்ணங்களையும் 'ஆ'வென்று அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான். 30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/40&oldid=824856" இலிருந்து மீள்விக்கப்பட்டது