பக்கம்:சாவி-85.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தின் மேலேயிருந்து அந்தக் கலைஞன் கீழே பார்த்தபோது 'ஏதடா... இந்தப் பையன் நம்மையே பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று நினைத்தானோ, என்னவோ? விசுவநாதனின் கோலம் அவனது கருணை உணர்வைத் தூண்டியிருக்க வேண்டும். ஒரனாக் காசு ஒன்றை அங்கிருந்து தூக்கிப் போட்டான். 'போய் ஒரு டீ வாங்கி வா. நீயும் குடிச்சிக்கோ!' அந்தக் கணத்தில் நீயும் ஒரு டீ குடிச்சிக்கோ என்ற வார்த்தைகள் அவன் காதில் தேனாக ஒலித்தன. அந்த அளவுக்குப் பசி காதை அடைத்திருந்தது அவனுக்கு. அதற்கடுத்த நாளும், ஆற்றங்கரை போய் குளித்துக் கொண்டி ருந்தான். அப்போது அருகில் துணி துவைத்துக் கொண்டிருந்த இரண்டு வைதிகப் பிராமணர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்: "என்ன வோய்... இலை போட எப்படியும் ஒரு மணி ஆயிடும் போலிருக்கே...!" இதைக் கேட்ட விசுவநாதனுக்கு 'ஓகோ இரண்டு பேரும் குளித்து முடித்து எங்கேயோ சாப்பிடப் போகப் போகிறார்கள் போலிருக்கிறது' என்கிறவரை புரிந்து போயிற்று. அவ்வளவுதான்; அவர்கள் புறப்படும் வரை காத்திருந்து அவர்கள் கூடவே நிழல் போல் தொடர்ந்தான். சந்நிதித் தெருவில், ஒரு வீட்டில் ஏதோ விசேடம். ஹோமப் புகை தெரிந்தது. வீட்டின் முகப்பில் இருந்த கம்பத்தில் சாய்ந்தபடி, நடராஜர் கோயிலில் நந்தனைப் போல் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். உள்ளே எப்படிப் போவது? நல்ல வேளையாக கைவண்டி ஒன்று வந்து வீட்டின் முன் நின்றது. பலாப்பழம், எண்ணெய் டின், பூசணிக்காய், வாழைத் தார் என்று ஏகப்பட்ட அயிட்டங்கள். 31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/41&oldid=824857" இலிருந்து மீள்விக்கப்பட்டது