பக்கம்:சாவி-85.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 శిrఅఉల్త్ 9ణp @శకత ఏ57@ _ఒవGr போனார்கள். சட்டென்று பலாப்பழத்தைத் தூக்கிக் கொண்டு கும்பலோடு கும்பலாய் அவனும் உள்ளே போய்விட்டான். தோட்டத்தில் பந்தல் போட்டு சமையல் நடந்து கொண்டிருந்தது. ரசம் கொதிக்கும் வாசனை மூக்கைத் துளைத்தது. பலாப்பழத்தை இறக்கி வைத்ததும், சமையல்காரர், ஏய் அம்பீ பலாப்பழம் அறுக்கணும். உள்ளே போய் மாமி கிட்ட எண்ணெய் வாங்கிட்டு வா...' என்றார். விசுவநாதனுக்கு ஒரே குவி அப்புறம் என்ன? அந்த சமையல்காரருக்கு உதவியாக ஒடி ஒடி எடுபிடி வேலைகள் செய்தான். - காத்திருந்த அந்தத் தருணம் வந்தது. பந்தியில் உட்கார்ந்து ஒரு பிடி பிடித்து விட்டுக் கிளம்பிய போது ஒரு அதிகாரக் குரல். 'ஏய்... அம்பீ.” அடிவயிறு கலங்கியது. மாட்டிக் கொண்டோம்!” அந்த அதிகாரக் குரலுக்குடையவர் "இப்படி வா இங்கே வந்து உட்கார்" என்றார். உட்கார்ந்தான். வெற்றிலைப் பாக்கோடு தட்டில் நாலணா தட்சிணை வைத்துக் கொடுத்தார். அட சாப்பாடும் போட்டுக் கையில் பணம் வேறா!' ஏதோ அந்த வீட்டு விசேடம் அன்று அவன் வயிற்றை நிரப்பியது. சரி, அடுத்த வேளை வேண்டுமானால் பட்டினி இருந்து விடலாம். அதற்குப் பிறகு.? . வீட்டை விட்டு வந்தது தவறு என்று உள்ளம் கலங்கியது. அந்தத் தெருவிலேயே இருந்த ஒரு ஒட்டலுக்குள் போய் முதலாளியிடம் தன் நிலைமையைச் சொல்லி, அவர் கருணையில் அங்கேயே தங்க இடம் கிடைத்து, அவன் தன் அப்பாவுக்குக் கடிதம் எழுதி, வில்லிவாக்கத்தில் அப்பாவின் குடும்ப நண்பர் 32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/42&oldid=824858" இலிருந்து மீள்விக்கப்பட்டது