பக்கம்:சாவி-85.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் சாகர் டாக்கீஸ் என்று இன்னொரு தியேட்டரும் இருந்தது. விசுவநாதனும் ராமநாதனும் அவரை சிநேகம் பிடித்துக் கொண் டார்கள். தியேட்டரில் ஒடும் படங்களுக்கான விளம்பரத் தட்டிகள் வைப்பது, போஸ்டர்கள் ஒட்டுவது போன்ற வேலைகளை விசுவ நாதன் விரும்பிச் செய்ததற்குக் காரணம்: போர்டு பாஸ்! அப்போதெல்லாம் போர்டு பாஸ் என்று ஒரு இலவச பாஸ் கொடுப்பார்கள். அது வைத்திருந்தால் இலவசமாக சினிமா பார்க்கலாம். ஆக, செலக்ட் தியேட்டரிலும் சாகர் தியேட்டரிலும் ஒடும் எல்லாப் படங்களையும் இருவரும் பார்த்து விடுவார்கள். இப்படியே மற்ற தியேட்டர்களோடும் தொடர்பு கொண்டு எல்லா பெரிய தியேட்டர்களிலும் விசுவநாதன் போர்டு பாஸ்" வாங்கியது பெரிய சாதனை. இந்த நிலையில் இனிமேல் சுயமாக நாமே போர்டு எழுதினால் என்ன?’ என்ற ஆசை விசுவநாதனுக்கு ஏற்பட, அப்புறம் ராமநாதனிடமிருந்து நட்போடு பிரிந்து வெளியே வர ரொம்ப நாள் ஆகவில்லை. அப்போதெல்லாம் தெருவில் நடந்து போகும்போதெல்லாம் எங்கேனும் விளம்பர போர்டுகளில் உள்ள எழுத்து அழிந்திருந்தால் மட்டுமே அது அவனது கண்களில் படும்! உடனே அந்தக் கடைக்குள் போவான். அழிந்து போன எழுத்தை மீண்டும் எழுதித் தருவதாகக் கேட்டு ஆர்டர் பிடிப்பான். அப்படி ஒரு நாள் போர்டுகளைப் பார்த்தபடியே அரண் மனைக்காரன் வீதியில் நடந்து போய்க் கொண்டிருந்தபோதுதான் 'விசித்திரன் என்ற பத்திரிகை போர்டு கண்களில் பட்டது. அந்த எழுத்துக்கள் அழிந்திருப்பதைப் பார்த்து விட்டு உள்ளே போனான். அங்கே அமர்ந்திருந்த அந்தப் பத்திரிகையின் உரிமையாளரை அணுகி 'போர்டு அழிந்திருக்கிறதே, புதுசாக. எழுதித் தரட்டுமா?" என்று கேட்டான். 35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/45&oldid=824861" இலிருந்து மீள்விக்கப்பட்டது