பக்கம்:சாவி-85.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 "எவ்வளவு சார்ஜ்?” 'ஐந்து ரூபாய்." "சரி, எழுதிக் கொண்டு வா' என்றார் முதலாளி. "ஏதாவது அட்வான்ஸ்...' என்று இழுத்தான் விசுவநாதன். 'ஏம்ப்பா. உன்னை நம்பி போர்டையே கொடுக்கறேனே, நீ என்னடான்னா அட்வான்ஸ் கேக்கறியே..." போர்டு எழுதிக் கொடுத்த பின் பணத்துக்கு நடையாக நடந்தான். ஐந்து ரூபாய் வந்த பாடில்லை. ஒரு மாதம் இழுத்தடித்த பிறகு எட்டனா கொடுத்தார். விசுவநாதனும் அத்தோடு விடுவதாக இல்லை. நச்சரித்துக் கொண்டே இருந்தான். 'பணம் மட்டும் குறிக்கோள் இல்லை. பணம் கேட்கும் சாக்கில் அடிக்கடி இப்படி வந்து போய்க் கொண்டிருந்தால் முதலாளியுடன் பரிச்சயம் ஏற்படும். அந்த நெருக்கத்தை வைத்துக் கொண்டு அந்த பத்திரிகை ஆபீஸிலேயே வேலை கேட்கலாமே! என்ற சபலம்தான். - அப்போது வில்லிவாக்கத்திலிருந்த விசுவநாதன் தினமும் பட்மேடு என்ற இடத்தில் கூலி ட்ரெயினில் - தொழிலாளர்கள் மட்டுமே பயணம் செய்யும் வண்டி என்பதனால் ஏற்பட்ட காரணப் பெயர் - ஏறி ராயபுரத்தில் இறங்கி, பர்மா ஷெல் டாங்க் பக்கமாக நடந்து அரண்மனைக்காரன் தெருவிலுள்ள விசித்திரன் ஆபீஸ் போய், 'ஸார். அந்த போர்டு எழுதியதற்கு பாக்கிப் பணம்...' என்று கேட்பதை ஒரு தவமாகவே செய்து வந்தான். ஒருநாள் துணிந்து உங்கள் பத்திரிகை ஆபீஸில் வேலை 36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/46&oldid=824862" இலிருந்து மீள்விக்கப்பட்டது