பக்கம்:சாவி-85.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 உடனே விசுவநாதனிடம் அந்த மாதம் வெளியான 'விசித்திரன் பிரதிகள் இருபத்தைந்தை எடுத்துக் கொடுத்தார் முனுசாமி. 'இதுதான் சம்பளம் கொண்டு போய் வித்து எடுத்துக்கோ.: விசித்திரன் பிரதிகளைத் துக்கிக் கொண்டு நேரே கந்தசாமி கோவில் அருகிலிருந்த பழைய பேப்பர் கடை ஒன்றில் விலைக்குப் போட்டான். எட்டணா கிடைத்தது. அதுதான் அவனது முதல் மாதச் சம்பளம்! உண்மையில் அவன் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. மாறாக பத்திரிகை ஆபீஸில் வேலை கிடைத்ததே பெருமகிழ்ச்சியாக மனதில் நிரம்பியிருந்தது. விசித்திரனில் வேலை பார்த்த அந்த ஒரு வருட காலமும் ஒவ்வொரு இதழிலும் அவன் எழுதியதெல்லாம் வெளியாகிக் கொண்டிருந்தன. அவன் என்ன எழுதிக் கொடுத்தாலும் முனுசாமி கம்போஸ் செய்து அச்சேற்றி விடுவார். முனுசாமிதான் கம்பாஸிடர், ஆசிரியர், சம்பளம் கொடுப்பவர் எல்லாம்! மாம்பாக்கம் சாமா சுப்பிரமணிய சாஸ்திரிகள் மகன் விசுவ நாதன் என்பதைச் சுருக்கி மா.சா.வி. என்ற பெயரில் முதலில் கொஞ்ச நாள் எழுதி பிறகு அதில் 'மா'வை எடுத்து விட்டான். அப்புறம் கொஞ்ச நாள் போனதும் சாவுக்கும் விக்கும் நடுவில் இருந்த புள்ளியையும் தூக்கி விட்டான். அதிலிருந்து சாவி என்ற புனைபெயர் நிலைத்துப் போயிற்று. 4 * * விசித்திரனில் இருந்த ஒரு வருட காலமும் சம்பளம் இல்லை. அதனால் நாள் முழுதும் பசியோடு வேலை செய்து விட்டு வீடு திரும்புவேன். அரண்மனைக்காரத் தெருவும், போஸ்ட் ஆபீஸ் தெருவும் சந்திக்கும் இடத்தில் ஒரு தண்ணீர்ப் பந்தல் உண்டு. அந்தக் காலத்தில் சிற்றுண்டி வழங்கும் இடங்களை 38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/48&oldid=824864" இலிருந்து மீள்விக்கப்பட்டது