பக்கம்:சாவி-85.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. ஆனந்த விகடன் அங்கீகாரம் விசுவநாதன் முதன்முதலாக சென்னை வந்தது உறவினர் வீட்டுக் கல்யாணத்துக்காக, சின்னஞ் சிறுவனான அவனுக்கு ஒரே த்ரில் பவழக்காரத் தெருவில் உறவினர், வக்கீல் ராமச்சந்திர ஐயர் வீட்டில் பெற்றோருடன் தங்கினான். அவர் ஆனந்த விகடன் பழைய இதழ்களைத் தம் பீரோவில் ஒழுங்காக அடுக்கி பத்திரப் படுத்தி வைத்திருந்தார். அத்தனை விகடன் இதழ்களையும் படித்து விட வேண்டும் என்று விசுவநாதனுக்குத் துடிப்பு. வக்கீலிடம் தயக்கத்துடன் கேட்டான். 'கசக்காமல், அழுக்காக்காமல் படிக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு இரண்டே இரண்டு விகடன் பிரதிகளை மட்டும் எடுத்துக் கொடுத்தார். அந்த இரண்டு இதழ் களையும் படித்து முடித்ததும், இன்னும் இரண்டு. இப்படி எல்லாவற்றையும் படித்துத் தீர்த்தான். ஒருநாள் அந்த வக்கீல் மாமா அவனுக்கு நாலணா கொடுத்தார். மனதுக்குள் போராட்டம். ஆசைகள் விசுவரூப மெடுத்தன. ஒன்று, போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை. அந்தக் காலத்தில் நாலனாவுக்கு இரண்டு சின்ன சைஸ் போட்டோ எடுத்துக் கொடுப்பார்கள். இன்னொரு ஆசை, அந்த வருடம் வெளியாகி இருந்த விகடன் தீபாவளி மலரை வாங்கிப் படிக்க வேண்டும். போட்டோவா? விகடனா? நீண்ட நேர யோசனைக்குப் பிறகு விகடன் என்று முடிவு செய்தான். நேராக விகடன் ஆபிஸை நோக்கி நடந்தான். 40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/50&oldid=824867" இலிருந்து மீள்விக்கப்பட்டது