பக்கம்:சாவி-85.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 நிர்வாகத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சதாசிவமும், அவரது நண்பர்களும் விலகிவிட்டார்கள். அவர்கள் விட்டுச் சென்ற இடத்தில் சங்கு சுப்பிரமணியமும், தி.ஜ.ர.வும் அமர்ந்தார்கள். அப்போது சாவிக்கும் அங்கே வேலை கிடைத்தது. பி.எம்.கண்ணன், நெ.பி.யூரீரங்கன் இருவரும் உதவி ஆசிரியர்கள். சாவி உப ஆசிரியர். சம்பளம் இருபத்தைந்து ரூபாய். இந்நிலையில் 'ஹிந்துஸ்தான் என்ற தமிழ்ப் பத்திரிகை ஒன்று ஹநுமானுக்குப் போட்டியாக வெளியானது. நாராயண அய்யங்கார் என்பவர் அதன் ஆசிரியர். பக்கம் பக்கமாய் புகைப் படங்களைப் போட்டு ஹிந்துஸ்தான் அசத்தியது. அதைப் பார்த்ததும் ஹநுமான் பத்திரிகையிலும் நிறையப் படங்கள் போட வேண்டும்' என்று ஆசிரியர் குழு முடிவெடுத்தது. 'இந்த இதழில் ஐம்பது படங்களுக்கு மேல் என்று ஒரு வாரம் ஹிந்துஸ்தான் மிகப் பெரிய அளவு போஸ்டரில் விளம்பரப் படுத்தியது. இதைப் பார்த்ததும் ஹநுமான் ஆசிரியர் குழு அவசரமாகக் கூடி ஆலோசனை நடத்தியது. நாம் அதைவிட அதிகமாகப் படங்கள் போடவேண்டும். ஆனால் நம்மிடம் அதற்கு வசதி இல்லையே! என்ன செய்யலாம்?" என்று யோசித்தது. சாவி ஒரு ஐடியா சொன்னார். "அவங்க ஐம்பது படங்களுக்கு மேல் என்று விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள். நாம் நூறு படங்களுக்குக் கீழ் என்று விளம்பரப்படுத்திடலாம்." எல்லோரும் சிரித்தாலும் யோசனை ւIՅ:165) Լ0 Այո Յ; இருக்கிறது என்று ஏற்றுக் கொண்டார்கள். 'ஹநுமான் பத்திரிகை பெரிய அளவில் ஹிண்டு பேப்பர் 42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/52&oldid=824869" இலிருந்து மீள்விக்கப்பட்டது