பக்கம்:சாவி-85.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 கொண்டிருப்பது தி.ஜ.ர.வுக்கு மிகுந்த வேதனை அளித்தது. ஒருநாள், நீங்களே சொந்தமாக ஒரு பத்திரிகை நடத்துங்களேன் என்று தி.ஜ.ர. யோசனை கூறியது கேட்டு சாவி வாய் விட்டுச் சிரித்தார். - "நானா? பத்திரிகையா? சொந்தமாகவா? பணத்துக்கு எங்கே போவது?" என்று கேட்டார். 'அதெல்லாம் பணமும் வேண்டாம்; ஒன்றும் வேண்டாம். நான் சொல்கிறபடி கேளும். கத்தரி விகடன் என்ற பெயரில் ஒரு பத்திரிகை வரப்போவதாக பத்திரிகையில் விளம்பரம் போடும். நடக்கப் போவதை அப்புறம் பாரும்' என்று தி.ஜ.ர. ஒரு புதிர் போட்டார். சாவிக்கு ஒன்றும் புரியவில்லை. 'என்ன யோசிக்கlங்க? மற்ற பத்திரிகைகளில் வரும் சுவாரசியமான செய்திகளையெல்லாம் கத்தரித்துப் போட்டுப் பத்திரிகை தயார் செய்வது. அதுதான் கத்தரி விகடன்." ஹநுமான் வாலையும், விகடன் அரசியல் நிருபர் வாலையும் சேர்த்து ஒரு கத்திரிக்கோல் வெட்டிக் கொண்டிருப்பது போல் படம் வரைந்து அதையே அந்தப் பத்திரிகையின் சின்னமாக்கி விடலாம்' என்பது தி.ஜ.ர.வின் யோசனை. 'சரி, பணம்?" "பணம் எதற்கு? விகடன் என்ற பெயரில் இன்னொரு பத்திரிகை வருவதை ஆனந்த விகடன் நிர்வாகம் நிச்சயம் விரும்பாது. அப்படி ஒரு விளம்பரத்தைப் பார்த்ததுமே உம்மை வரச் சொல்லி, "நீ பத்திரிகையெல்லாம் ஆரம்பித்து சிரமப் படாதே, பேசாமல் விகடனில் சேர்ந்து விடு என்று உமக்கு வேலை போட்டுத் தந்து விடுவார்கள்' என்றார் தி.ஜ.ர. இது கொக்கின் தலையில் வெண்ணெயை வைத்துப் பிடிப்பது போலிருக்கிறதே என்று சாவி யோசித்தார். 44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/54&oldid=824871" இலிருந்து மீள்விக்கப்பட்டது