பக்கம்:சாவி-85.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 சாவி தயக்கத்தோடு லேசாக இழுத்த மாதிரி "நாளைக்குச் சொல்கிறேன்" என்றார். தி.ஜ.ர.வைக் கலந்தாலோசித்த பிறகு ஒப்புக் கொள்ளலாம் என்பது சாவியின் நினைப்பு. "என்ன யோசிக்கறே? பத்திரிகை நடத்துவதெல்லாம் அவ்வளவு சுலபமில்லே. பேசாமல் வேலையை ஒப்புக் கொள்' என்றார் கல்கி சற்று அழுத்தமாகவே. "யோசனை ஒண்னுமில்லை; இதுவரை என் புதிய பத்திரிகைக்காகப் பணம் செலவழித்தவருக்கு என்ன பதில் சொல்வ தென்பதுதான் பிரச்னை' என்றார் சாவி, - "அவர் எவ்வளவு செலவு பண்ணியிருக்கார்?" 'நூத்தியிருபது ரூபா சட்டென்று வாயில் வந்த தொகை ஒன்றைச் சொல்லி வைத்தார் சாவி. 2_LGoor 905 &māgāści 'please pay Rs. 120/- to M.S.Viswanathan என்று கையெழுத்துப் போட்டு சாவியிடம் தந்து, "இந்தா, இதை அக்கவுண்டன்ட் கிட்ட போய்க் கொடு. பண்ம் கொடுப்பார், வாங்கிக் கொள்' என்றார். சாவி முதல் முதல் பார்க்கும் பெரிய தொகை அது. குஷி பிடிபடவில்லை. பணம் கிடைத்ததும் நேரே அம்பீஸ் கேப் போய் மசாலா தோசை சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து அப்படியே பூக்கடை போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரிலுள்ள கதர்க் கடைக்குச் சென்று சில்க் ஜிப்பா ஒன்று தைத்துப் போட்டுக் கொண்டார். அப்போதெல்லாம் கதர்க் கடையில் ஒரு டெய்லரும் மெஷினுடன் உட்கார்ந்திருப்பார். மறுநாள் சில்க் ஜிப்பாவுடன் போய் நின்ற போது, கல்கி அவர்கள் பார்த்து விட்டு 'நேற்று கொடுத்த பணத்தில் ஜிப்பாவா? பேஷ்!" என்றார். சாவி வெட்கத்தோடு தலையசைத்தார். 46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/56&oldid=824873" இலிருந்து மீள்விக்கப்பட்டது