பக்கம்:சாவி-85.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் "சீச்சீ. சில்க் ஜிப்பாவெல்லாம் போடக் கூடாது. கதர்ச் சட்டையாக வாங்கிப் போட்டுக் கொள். அதுதான் கெளரவமாக இருக்கும்” என்ற உபதேசத்துடன் சாவியை வேலையில் சேர்த்துக் கொண்டார் விகடன் அஸோஸியேட் எடிட்டர் கல்கி. அன்று வீட்டுக்குத் திரும்பியதும் சில்க் சட்டையைக் கழற்றிப் போட்டதோடு சரி. அதன் பின் சாவியினுடைய வாழ்க்கையின் பெரும்பகுதி நாட்கள் கதர்ச் சட்டை நாட்களாகவே ஆயின. 47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/57&oldid=824874" இலிருந்து மீள்விக்கப்பட்டது