பக்கம்:சாவி-85.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. ஒன்பது மாதம் கடுங்காவல் ஆனந்த விகடனில் ஏறத்தாழ இரண்டாண்டு காலம் உதவி ஆசிரியராக வேலை பார்த்தபோது மாலி, துமிலன், தேவன், நாடோடி, கதிர், நாரதர் சீனிவாச ராவ், தானு, வர்மா, ரவி என்று பல ஜாம்பவான்களுடன் சாவிக்கு ஏற்பட்ட அறிமுகமும் நட்பும் அவரது எழுத்துலக வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரிந்தன. அப்போது விகடன் அலுவலகம் பிராட்வேயில் இருந்தது. இப்போது அப்பர் அச்சகம் உள்ள இடம். அன்றாடம் வரும் சிறுகதைகளைப் படித்து ஒவ்வொன்றுக்கும் கதைச் சுருக்கம் எழுதி வைக்க வேண்டும் என்பது சாவிக்கு இடப்பட்டிருந்த பணி. ஒருநாள் மினர்வா தியேட்டரில் நைட்ஷோ ஆங்கிலப் படம் பார்த்துவிட்டு மறுநாள் காலை ஏழரை மணிக்கே அலுவலகம் போய் விட்டார். படித்து முடிக்க வேண்டிய கதைகள் நிறையச் சேர்ந்து விட்டதால், காலையிலேயே ஆபீஸுக்குப் போய் எல்லா வற்றையும் படித்து முடித்துவிட முடிவு செய்தார். ஆபீஸ் புறப்படும் முன் மண்ணடி 'மினர்வா கபே'யில் சுடச்சுட இட்லியும் வடையும் சாப்பிட்டு விட்டுத் தன் அறையில் போய் உட்கார்ந்தார். தலைக்கு மேல் மின்விசிறிக் காற்று, நைட் ஷோ, இட்லிசாம்பார் எல்லாமாகச் சேர்ந்து, கதை படிக்கத் தொடங்கியதுமே 48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/58&oldid=824875" இலிருந்து மீள்விக்கப்பட்டது