பக்கம்:சாவி-85.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 கொண்டிருந்த வேளையில்தான் ஏர் ரெய்ட் வார்டன் வேலை சாவியைத் தேடி வந்தது. தினமும் ஏ.ஆர்.வி. டிரஸ்ஸில், இரவு நேரங்களில் தெருத் தெருவாக விசில் ஊதிக் கொண்டே போய் பொதுமக்களை எச்சரிக்க வேண்டும். வீட்டுக் கதவுகள் மூடப்பட்டு, விளக்குகள் அணைக்கப்பட்டிருக்கின்றனவா என்பதைக் கண்காணிக்க வேண்டும். இதுதான் ஏர் ரெய்ட் வார்டனின் வேலை. சம்பளத்தோடு இலவசமாய்ச் சாப்பிட்டுக் கொள்ள ஒவ்வொரு வார்டிலும் தனித்தனியாக மெஸ்ஸும் உண்டு. விகடனில் உதவி ஆசிரியராக இருந்து விட்டு இப்படித் தெருத் தெருவாக விசில் ஊதிக் கொண்டிருக்கிறோமே என்ற சோகமும் கூடவே உள்ளுக்குள் சாவியை வாட்டிக் கொண்டிருந்தது. 1942 ஆகஸ்ட் எட்டாம் தேதி, வெள்ளையனே வெளியேறு என்று குரல் கொடுத்த மகாத்மா காந்தி பம்பாயில் கைது செய்யப்பட்டார். அடுத்தடுத்து நேரு, படேல் போன்ற காங்கிரஸின் பெருந்தலைவர்களும் கைது செய்யப்பட்டு நாடே கொந்தளித்துக் கொண்டிருந்தது. காந்திஜி கைதானதும், நாடெங்கும் ஆங்காங்கே தலை மறைவாக இருந்த காங்கிரஸ்காரர்களும், கம்யூனிஸ்ட்களும் 'காந்திஜி அதைச் செய்யச் சொன்னார்... இதைச் செய்யச் சொன்னார். என்று எதையாவது செய்தி பரப்பிக் கொண்டே இருந்தார்கள். தண்டவாளத்தைப் பெயர்க்கச் சொன்னார்... தந்திக் கம்பிகளை அறுக்கச் சொன்னார்... தபாலாபீஸைக் கொளுத்தச் சொன்னார்..." என்று காந்திஜி பெயரைச் சொல்லி ஏராளமான துண்டுப் பிரசுரங்கள் ரகசியமாகச் சுற்றி வந்தன. 'தினமணி'யில் அப்போது உதவி ஆசிரியராக இருந்த சாவியின் நண்பர் என்.ராமரத்னம் சில துண்டுப் பிரசுரங்களை சாவியிடம் தந்து அவற்றை ரகசியமாக விநியோகிக்கச் சொன்னார். மிகப் பெரிய தேசப் பணியில் ஈடுபடுகிறோம் என்ற 50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/60&oldid=824878" இலிருந்து மீள்விக்கப்பட்டது