பக்கம்:சாவி-85.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் பெருமிதத்துடன் அவற்றை சாவி விநியோகம் செய்தார். காந்திஜி சிறைப்பட்டார் என்ற செய்தி கேட்டதும் நெஞ்சம் பொறுக்காமல் கொதித்துப் போனார். 'தேச விடுதலைக்காக எதையாவது செய், உடனே செய்...' என்று உள்ளிருந்து ஒரு குரல் சாவியை வெறியேற்றிக் கொண்டிருந்தது. என்ன செய்வது? தந்திக் கம்பி அறுப்பது, தண்டவாளம் பெயர்ப்பது போன்ற பயங்கரங்களைத் தான் மட்டும் தனியாகச் செய்யக்கூடியதாக அவருக்குத் தோன்ற வில்லை. ஆனாலும், அருகில் உள்ள மண்ணடி தபாலாபீசைக் கொளுத்தி விடலாம் என்ற முடிவுடன் ஒரு காலை வேளையில், வீட்டில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டு விட்டார். ஒரு தீப்பெட்டியுடன் தபாலாபீஸ் வாசலில் போய் நின்று எல்லாத் தீக்குச்சிகளையும் ஒன்றாகச் சேர்த்துப் பற்ற வைத்து டக்கென்று அவ்வளவையும் தபால் பெட்டிக்குள் போட்டார். மார்பு படபடவென அடித்துக் கொண்டது. வயிற்றுக்குள் ஒரு ஜ்வாலை கிளம்பியது. அவ்வளவு கடிதங்களும் அப்படியே பற்றிக் கொண்டு பெரிதாக எரிந்து, தபாலாபீசே சாம்பலாகி விடப் போகிறது, தான் பெரிய ஹீரோவாகப் போகிறோம் என்று ஒரு அதீத கற்பனை. சில நிமிடங்கள் ஆயின. எதுவும் எரிந்ததாகத் தெரிய வில்லை. தபால் பெட்டிக்குள்ளிருந்து லேசாக வெறும் புகை மட்டுமே வந்தது. சற்று நேரத்தில் அதுவும் அடங்கிப் போய் விட்டது. இது சாவிக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தாலும், தன் வீரத்தை வெளியுலகுக்குப் பிரகடனப்படுத்தி விடவேண்டும் என்ற ஆவலில் வெகு அருகே இருந்த செக்குமேடு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன் செய்தார். 'யார் நீ? என்றது. செக்குமேடு. 'நான் இங்கே மண்ணடி போஸ்ட் ஆபீஸுக்குத் தீ வைத்துவிட்டேன். உடனே வாங்க" என்று ஒரு பரபரப்போடு அழைத்தார் சாவி. 'நீ அங்கேயே நில். இதோ வருகிறோம். உன் அடையாளம் என்ன?’ என்று கேட்டது போலீஸ். 51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/61&oldid=824879" இலிருந்து மீள்விக்கப்பட்டது