பக்கம்:சாவி-85.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 "நான் ஒரு காங்கிரஸ்காரன். கதர்ச் சட்டை அணிந்திருப்பேன். தபாலாபீசுக்கு எதிரிலேயே உங்களுக்காகக் காத்திருப்பேன். உடனே வாங்க" என்றார். அடுத்த சில நிமிடங்களில் போலீஸ் வேன் பறந்து வந்தது. அதிலிருந்து இறங்கிய போலீசார் சாவியைக் கைது. செய்து ஸ்டேஷனுக்கு அழைத்துப் போய் கேஸ் எழுதிக் கொண்டு லாக்கப்பில் போட்டார்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகு எழும்பூர் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டார். கோர்ட்டில் பதினோரு மணிக்கு விசாரணை ஆரம்பமாயிற்று. பெயரை மூன்று முறை கூவி அழைத்தார்கள். 'குற்றத்தை ஒப்புக் கொள்கிறாயா?" என்று கேட்டார் மாஜிஸ்ட்ரேட் ஆகஸ்ட் போராட்டத்தில் ஈடுபடும் எவரும் கோர்ட்டில் குற்றத்தை ஒப்புக் கொள்ளக் கூடாது' என்பது மேலிடத்துக் கட்டளை. அதனால் 'நான் குற்றவாளி அல்ல என்று திருத்தமாகச் சொன்னார் சாவி. ஒன்பது மாதம் கடுங்காவல் தண்டனை விதித்து மாஜிஸ்ட்ரேட் தீர்ப்புக் கூறினார். சிறையில் மூன்றாம் வகுப்பு. 'எனக்கு 'பி' கிளாஸ் வேண்டும்' என்று கேட்டார் சாவி. 'அதற்கெல்லாம் ஒரு தகுதி வேண்டும். அந்தஸ்து வேண்டும். உனக்கு ஏதேனும் சொத்து இருக்கிறதா?" என்று கேட்டார் மாஜிஸ்ட்ரேட். “கிராமத்தில் சொந்த வீடு இருக்கிறது." “என்ன மதிப்பு?" "இருபதாயிரம் ரூபாய்' "என்ன கிராமத்து வீட்டுக்கு இருபதாயிரம் ரூபாயா?" “யுவர் ஹானர், அது என் சொந்த வீடு. நான் அதற்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/62&oldid=824880" இலிருந்து மீள்விக்கப்பட்டது