பக்கம்:சாவி-85.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் போடும் மதிப்பு இருபதாயிரம்' என்று சாவி சொன்னதைக் கேட்டு மாஜிஸ்ட்ரேட் சிரித்து விட்டார். 'உன் நகைச்சுவை உணர்வைப் பாராட்டுகிறேன். ஆனால் 'சி வகுப்புதான்' என்று தீர்ப்புக் கூறி அனுப்பி விட்டார் மாஜிஸ்திரேட். பெல்லாரி பக்கத்தில் இரண்டு மூன்று மைல் தள்ளி அமைந்துள்ள அலிபுரம் சிறைச்சாலைக்குக் கொண்டு போகப் பட்டார் சாவி. அதே சிறையில் கக்கன்ஜி, எஸ்.ஏ.ரஹீம், ஆதம்பாக்கம் ராமகிருஷ்ண ஐயர், மதுரை வைத்தியநாத ஐயர் திருக்கோவிலூர் ராஜகோபாலன், கொடுமுடி ராஜகோபாலன், பின்னாளில் காமராஜருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த ஜி.ராஜகோபாலன், தமிழக அரசின் தலைமைச் செயலாளராகப் பதவி வகித்த க.திரவியம் போன்ற முன்னணி விடுதலைப் போராட்ட வீரர்களும் இருந்தார்கள். இவர்களுடன் நாமும் இங்கேயா?” என்ற பெருமை கலந்த மகிழ்ச்சி, தனக்கு பி கிளாஸ் கிடைக்க வில்லையே என்ற சாவிக்கு இருந்த ஏக்கத்தைப் போக்கிவிட்டது. பெரிய தலைவர்களுக்குச் சிறையில் "ஏ" வகுப்பு தரப் பட்டிருந்தது. அவர்களுக்கு தினந்தோறும் காலையில் சிற்றுண்டிக்கு உப்புமா, இட்லி போன்ற ஐட்டங்கள் கிடைக்கும். சாவி போன்ற 'சி வகுப்புக் கைதிகளுக்கு வெறும் கஞ்சிதான். அதுவும் புழுக்கள் நெளியும் கஞ்சி. "ஏ" வகுப்புக்கும் 'சி வகுப்புக்கும் இடையே கம்பிவேலி தடுப்பு மட்டுமே இருந்தது. சிற்சில நாட்களில் சாவி அந்தத் தடுப்பு பக்கம் போய் நின்று 'ஏ' வகுப்பு சிறைத் தோழர்களிடமிருந்து அன்பளிப்பாகக் கிடைக்கும் உப்புமா, இட்லி ஆகியவற்றை வாங்கிச் சாப்பிடுவதும் உண்டு. 53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/63&oldid=824881" இலிருந்து மீள்விக்கப்பட்டது