பக்கம்:சாவி-85.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் சிறைத் தோழராக இருந்த நடேசன் என்பவரையும் சேர்த்துக் கொண்டு கொஞ்ச நாள் ராமகிருஷ்ண ஐயரிடம் இசைப் பயிற்சி பெற்றார். ஆரம்பித்த சில நாட்களிலேயே குருவுக்குத் துல்லியமாக ஓர் உண்மை புரிந்து விட்டிருக்க வேண்டும். ஒருநாள் சாவியை அழைத்து "நீங்க சங்கீதத்தை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ளலாம். கற்றுக் கொள்வதை இன்றோடு நிறுத்தி விடலாம். ஏற்கெனவே ரொம்பப் பேர் இங்கே சிறைத் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்க வேறு அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாமே" என்று நாசூக்காகச் சிரித்துக் கொண்டே சொல்லி இசைப் பயிற்சிக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார். சாவிக்குப் பெரும் ஏமாற்றம்தான். ராமகிருஷ்ண ஐயர் மீது சற்று கோபம் கூட. 4 : ம்... என்ன செய்வது? நான் மட்டும் விடாப்பிடியாக இசைப் பயிற்சியைத் தொடர்ந்திருந்தால் இன்று மகாராஜபுரம் விசுவநாதய்யர் போல மாம்பாக்கம் விசுவநாதய்யர் என்ற பெயரில் பெயரும் புகழும் கிட்டியிருக்கும். ராமகிருஷ்ண ஐயரால் போச்சு! இசை உலகம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று எண்ணிக் கொண்டேன்' என்கிறார் சாவி. சிறையில் ஹிண்டு பத்திரிகை ஒன்று மட்டும்தான் உள்ளே வரும். அதுவும் சிறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் ரகசியமாக இரவு நேரங்களில் வார்டர்கள் கொண்டு வந்து கொடுப்பார்கள். தினந்தோறும் வரும் அந்தப் பத்திரிகையை கொடுமுடி ராஜ கோபாலன் என்பவர் முழுதும் படித்து செய்திச் சுருக்கங்களை ஒரு ஸ்லேட்டில் எழுதிக் கொண்டு இரவில் கைதிகளை ஒரிடத்தில் கூட்டி, அவர்களுக்கு அந்தச் செய்திகளைப் படித்துக் காட்டிய பிறகு அந்த ஸ்லேட்டை எல்லா பிளாக்குகளுக்கும் அனுப்பி வைப்பார். தவிர தினமும் வெளியிலிருந்து உள்ளே வந்து சேரும் அரசியல் கைதிகள் வாய் வழியாகச் சில தகவல்களும் 55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/65&oldid=824883" இலிருந்து மீள்விக்கப்பட்டது