பக்கம்:சாவி-85.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 கிடைப்பதுண்டு. அவை சில சமயம் உண்மையாக இருக்கும். சில சமயம் பொய்யாகவும் இருக்கும். ஜெயிலுக்குள் விடுதலைப் போராட்ட வீரர்கள் சும்மா @@### 3. Lig. 'Jail is also a field of action' arcău), lo&m; lost காந்தி சொன்னதாக ஒரு நாள் சிறைக்குள் ஒரு செய்தி பரவியது. அங்கே இருந்த கம்யூனிஸ்ட்டுகள்தான் இதைப் பரப்பினார்கள். கம்பிகளை உடைத்துக் கொண்டு வெளியே செல்லும்படி காந்திஜி சொன்னதாக அந்தச் செய்தி விசுவரூபமெடுத்து உலா வந்தது. அவ்வளவுதான்; சாவி உள்ளிட்ட பலருக்கும் ஜிவ்'வென்று ரத்தம் சூடாகியது. காந்தியே சொல்லிட்டார். பிறகென்ன? என்று ஆங்காங்கே கைதிகள் கூடிக் கூடிப் பேசிக் கொண்டார்கள். 'ஜெயிலை உடைத்துக் கொண்டு வெளியேறுவது என்று அன்றிரவு ஒருமனதாகத் தீர்மானம் போட்டு, அதை உடனடியாகச் செயல்படுத்துவது என்றும் முடிவெடுத்தார்கள். இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக் கேட்ட வார்டர் ஒருவர் அதை அப்படியே சிந்தாமல் சிதறாமல் சிறைச் சாலை அதிகாரியிடம் (ஜெயிலர்) வத்தி வைத்து விட்டார். அப்போது ஹெள துரை என்கிற வெள்ளைக்காரன்தான் அந்த ஜெயிலின் சூப்பரின்டென்டன்ட். பொல்லாதவன். திருச்சி சிறையில் பிரகாசம்காரு இருந்த சமயம், அவன் கொட்டத்தை அடக்க ஒருநாள் அவனைச் செருப்பாலேயே அடித்து விட்டாராம். அன்றிலிருந்து காங்கிரஸ்காரர்கள் என்றால் ஹெள துரைக்கு மகா வெறுப்பு. அவர்களைப் பார்த்தாலே எரிச்சலுடன் மிகக் கடுமையாக யூ... காந்தி கேப்' என்று தலை முடியை முரட்டுத் தனமாகப் பற்றி இழுத்து கொடுமைப்படுத்துவான். அரசியல் கைதிகள் சிறையை உடைத்து வெளியேறப் போகிறார்கள் என்று அவன் கேள்விப்பட்டால் சும்மா இருப்பானா? மறுநாள் விநாயகர் சதுர்த்தி. திங்கட்கிழமை. அதற்கு 56

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/66&oldid=824884" இலிருந்து மீள்விக்கப்பட்டது