பக்கம்:சாவி-85.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 போட்டான். அவர் தோள் பட்டையில் அந்த பலமான அடி மிக வேகமாக வந்திறங்கியது. அம்மாடி என்று சுருண்டு விழுந்தார். அதே சமயம் அடி வாங்கிக் கொண்டே பல பேர் தடுமாறி அவர் மீது வந்து விழுந்தார்கள். அதனால் மேற்கொண்டு அடி விழாமல் சாவி தப்பிக்க முடிந்தது. ஒரு வாரத்துக்குப் பிறகுதான் சிறைச்சாலையில் மாமூல் நிலை திரும்பியது. அப்புறம்தான் எப்படி இருக்கீங்க?' என்று ஒருவருக்கொருவர் மெதுவாக முனகல் குரலில் நலம் விசாரித்துக் கொண்டார்கள். சாவி மீது விழுந்த அடி வலது தோளுக்குக் கீழ் முதுகுப் பக்கம் கொழுக்கட்டை போலப் பெரிதாக வீங்கிப் போயிருந்தது. அதைச் சுட்டிக் காட்டி தன் சிறைச்சாலைத் தோழர்களிடம் அவர் சொன்னார்: 'பாருங்கய்யா...! என் ஆசை நிறைவேறிப் போச்சு, பிள்ளையார் சதுர்த்திக்கு வாயிலே கொழுக்கட்டைக்கு ஆசைப் பட்டேன். ஹெள துரை முதுகிலே கொடுத்துட்டான்' 58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/68&oldid=824886" இலிருந்து மீள்விக்கப்பட்டது