பக்கம்:சாவி-85.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 வந்தவர், "அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்?' என்று சாவியைக் கேட்டார். 'சக்தி பத்திரிகை ஆசிரியர் தி.ஜ.ர. அடுத்த தெருவில் ஒரு ஒட்டல் மாடியில் தங்கியிருக்கிறார். அவர் அவ்வப்போது என்னை ஒட்டலுக்கு அழைத்துச் சென்று சாப்பிடச் சொல்கிறார். சக்தியில் ஏதாவது எழுதச் சொல்லி ஐந்து பத்து தருகிறார். அவர் ஆதரவில்தான் காலம் ஒடிக்கொண்டிருக்கிறது" என்றார் சாவி, அச்சமயம் செட்டி நாட்டு இளைஞர் சின்ன அண்ணாமலை என்பவர் தற்காலப் பிரச்னைச் சுடர் என்ற பெயரில் மாதம் ஒரு புத்தகம் வெளியிட்டுக் கொண்டிருப்பதாகவும் அடுத்த மாத வெளியீடாக சாவி ஒரு புத்தகம் எழுதித் தர வேண்டும் என்றும் ரஹீம் கேட்டுக் கொண்டார். 'இப்போது வங்காளத்தில் பஞ்சம் தோன்றி மக்கள் மாய்ந்து கொண்டிருக்கிறார்கள். அதன் பின்னணி விவரங்களுடன் வங்காளப் பஞ்சம்' என்ற தலைப்பில் நீங்கள் எழுதலாமே" என்றும் யோசனை சொன்னார். அத்துடன் அந்தப் புத்தகம் எழுதுவதற்கு உதவியாக FORUM போன்ற பத்திரிகை களையும் வேறு சில வெளியீடுகளையும் வாங்கித் தந்தார். ரஹீம் விருப்பப்படி சாவி வங்காளப் பஞ்சம்' என்ற தலைப்பில் உடனே ஒரு புத்தகம் எழுதிக் கொடுத்தார். அதற்காக ஐம்பது ரூபாய் சன்மானத் தொகையை மறுநாளே ரஹீம் சின்ன அண்ணா மலையிடமிருந்து வாங்கி வந்து தந்தபோது சாவி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அப்போது அந்த ஐம்பது ரூபாய் ஏதோ ஐம்பது லட்சம் போல இருந்தது சாவிக்கு. நாளடைவில் தமிழ்ப்பண்ணை சின்ன அண்ணாமலையும் சாவியும் நெருங்கிய சிநேகிதரானார்கள். மாம்பலத்தில் நல்லி கடைக்குப் பக்கத்தில் கார் ஷெட் போன்ற ஒரு சின்ன இடத்தில் தமிழ்ப்பண்ணை நடந்து கொண்டிருந்தது. நாமக்கல் கவிஞர், ராஜாஜி, திரிகூட சுந்தரம் பிள்ளை, வெ. சாமிநாத சர்மா போன்ற அறிஞர்களின் நூல்கள் அங்கே இடம் பெற்றிருந்தன. அந்தப் புகழ்மிக்க இலக்கியவாதிகளுடன் சாவியின் பெயரையும் சேர்த்துக் கொண்டு 60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/70&oldid=824889" இலிருந்து மீள்விக்கப்பட்டது