பக்கம்:சாவி-85.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் அவரது புகைப்படத்தையும் தமிழ்ப்பண்ணைக் கூடத்தில் மாட்டி வைத்திருந்தார் சின்ன அண்ணாமலை. சாவிக்கு இது கூச்சத்தை அளித்ததால் சின்ன அண்ணாமலையிடம் சொல்லி அந்தப் படத்தைச் சில நாட்களுக்குள்ளாகவே அங்கிருந்து அகற்றிவிட்டார். இந்தச் சமயத்தில் தி.ஜ.ரங்கநாதன் (தி.ஜ.ர.) ஒருநாள் சாவியிடம், சிங்கப்பூரிலிருந்து ஆதித்தன் என்பவர் சென்னைக்கு வந்திருக்கிறார். இப்போது லிங்கிச் செட்டித் தெருவில்தான் இருக்கிறார். அவர் ஏதோ பத்திரிகை தொடங்கப் போவதாகக் கேள்வி. உம்மை அவரிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறேன், வாரும்' என்று அழைத்துப் போனார். அறிமுகப்படலம் முடிந்ததும் , சாவி அவர்களின் நகைச் சுவை உணர்வு, பத்திரிகை அனுபவம் போன்ற விவரங்களைக் கேட்டறிந்த ஆதித்தனார் சாவியிடம் பிரியமாகப் பழகத் தொடங்கினார். 'நான் இன்னும் இரண்டொரு மாதங்களில் 'தமிழன்’ என்றொரு வார இதழ் தொடங்கப் போகிறேன். அதுவரை நீங்கள் அவ்வப்போது வந்து போய்க் கொண்டிருங்கள்' என்றார். அவர் அவ்வப்போது' என்று சொன்னதை சாவி 'தினமும்’ என்று மாற்றிக் கொண்டு நாள் தவறாமல் மாலை நாலு மணிக்கெல்லாம் ஆதித்தனார் முன் போய் நிற்பார். அந்த நேரம்தான் டிபன் சாப்பிட தெருக்கோடியில் உள்ள ஓட்டலுக்கு அவர் செல்வது வழக்கம். போகும்போது சாவியையும் கூடவே அழைத்துப் போவார். அப்போதெல்லாம் ஆதித்தனார் எது சாப்பிட்டாலும் இரண்டு இரண்டாகத்தான் சாப்பிடுவார். 'ரெண்டு ஸ்வீட்... ரெண்டு தோசை...' என்றுதான் ஆர்டர் கொடுப்பார். கூடவே சாவிக்கும் சேர்த்து மூன்று செட்டாகச் சொல்வார். இப்படி தினமும் சாவி பழகி வந்தபோது ஆதித்தனாரின் சிந்தனை, ரசனை, செயல்திறமை மூன்றும் புரிந்து கொள்ள முடிந்தது. அது சாவிக்குப் பின்னாளில் பயனுள்ள பாடமாக அமைந்தது. வியாபார நோக்கில் 61

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/71&oldid=824890" இலிருந்து மீள்விக்கப்பட்டது