பக்கம்:சாவி-85.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ਯ76ੀ - 85 ஆதித்தனார் எதையும் நுணுக்கமாகக் கவனித்து அணுகும் முறையைத் தம் மனதில் பதிய வைத்துக் கொண்டதற்கு உதாரணமாக ஒரு நிகழ்ச்சியை சாவி சொல்கிறார்: "நாங்கள் ஒட்டலுக்குப் போனபோது ஒருநாள் வழக்கம் போல் என்ன இருக்கிறது?’ என்று சர்வரைக் கேட்டார் ஆதித்தனார். சர்வரும் வழக்கம் போல் பட்டியலை ஒப்புவித்தார். சட்டென்று ஆதித்தனார் பார்வை அங்கே எதிரில் மர அலமாரியில் கண்ணாடி கதவுக்குப் பின்னால் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஜாங்கிரி மேல் போனது. "பார்த்தீங்களா? அந்த சர்வர் ஜாங்கிரி இருப்பதைச் சொல்லாமலே விட்டுவிட்டார். சொல்லியிருந்தால் நான் ஆர்டர் பண்ணியிருப்பேன், இல்லையா? இப்போது என்ன ஆக்சு? ஒட்டல் முதலாளிக்குத்தானே நஷ்டம் வியாபாரம் என்று வரும்போது நம்மிடம் என்னென்ன இருக்கிறது என்பதை சாப்பிட வருகிறவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இல்லையெனில் நஷ்டம் வியாபாரிக்குத்தான். அந்த சர்வர் நம்மிடம் 'ஸார் இன்று ஸ்பெஷலாக ஜாங்கிரி போட்டிருக்கிறோம். ரொம்ப நன்றாயிருக்கிறது. ரோஸ் மாதிரி இருக்கு பாருங்க. சுடச் சுட வந்திருக்கிறது என்று சொல்லியிருந்தால் நாம், நாக்கில் ஜலம் ஊறி, ஆளுக்கு இரண்டு வாங்கிச் சாப்பிட்டிருப்போம் அல்லவா?" என்றார். ஆதித்தனார் சொன்னதில் எவ்வளவு அர்த்தம் இருக்கிறது என்பதை நான் எண்ணிப் பார்த்து வியந்து போனேன். இன்றும் கூட தினத் தந்தி'யில் அவ்வப்போது அதன் சிறப்பம்சங்கள் குறித்து அவர்களே விளம்பரப்படுத்திக் கொள்வதைப் பார்க்கும் போது எனக்கு ஆதித்தனார் ஞாபகம் வரத் தவறுவதில்லை." கையால் தயாரித்த காகிதத்தில்தான் ஆதித்தனார் தமிழன்' பத்திரிகையைத் தொடங்கினார். திரு. கோ.த.சண்முகசுந்தரம் என்ற எழுத்தாளரை ஆசிரியராகக் கொண்டு தினத் தந்தியை ஆரம்பித்தார். தலையங்கம் முதல் பல்வேறு செய்திகளை எளிய 62

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/72&oldid=824891" இலிருந்து மீள்விக்கப்பட்டது