பக்கம்:சாவி-85.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் நடையில் சண்முகசுந்தரம் எழுதி வந்தார். சாவியை ஒருநாள் ஆதித்தனார் கோ.த.ச.வுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். ஆனால், 'தமிழன்’ பத்திரிகையில்தான் சாவியை உதவி ஆசிரியராகச் சேர்த்துக் கொண்டார். சம்பளம் ஐம்பது ரூபாய். அப்போது, எழுத்தாளர் பி.யூரீ.ஆசார்யா அவர்களின் மகன் நாராயணன் 'தினத் தந்தி'யில் செய்தி ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்திருந்தார். சாவி தமிழனில் வேலை செய்தாலும் சின்னச் சின்ன செய்திகளை அவ்வப்போது 'தினத் தந்தி"க்காகத் தமிழில் மொழி பெயர்த்துத் தருவதும் உண்டு. ஆனாலும் தமிழனிலோ, தினத் தந்தி'யிலோ தனக்கு ஒரு பெரிய திருப்புமுனை ஏற்படும் என்ற நம்பிக்கை சாவிக்கு ஏற்படவில்லை. சாவி எப்போதுமே கல்கியின் தீவிர ரசிகர். சிறையிலிருந்து விடுதலை பெற்று சென்னை திரும்பியதும் ஆசிரியர் கல்கியை போய்ப் பார்த்து வேலை கேட்டபோது, 'இப்போதுதான் பத்திரிகை ஆரம்பித்திருக்கிறோம். கொஞ்ச நாள் கழித்துப் பார்க்கலாம் என்று சொல்லி அனுப்பி விட்டார் கல்கி. திரைப்படங்களின் நீளம் குறித்து கல்கி தமது பத்திரிகையில் காரசாரமாகக் கட்டுரைகள் எழுதினார். “எத்தனை அடி வேண்டும்?" என்று அவர் எழுதிய கட்டுரை சாவியை வெகுவாகக் கவர்ந்தது. 'ஒரு திரைப்படம் பதினெட்டாயிரம் அடி நீளம் என்பது ரொம்ப அதிகம். ரசிகர்களுக்குப் போர் அடித்துப்போகும்' என்பதை 'நாலு பேர் அபிப்ராயம்' என்ற தலைப்பில் நகைச் சுவையுடன் ஒரு கட்டுரை எழுதித் தமிழனில் பிரசுரித்தார் சாவி. திரைப்படங்களின் நீளம் எவ்வளவு இருக்க வேண்டும் என்று ஒரு ரிக்ஷாக்காரர், ஒரு சினிமா தியேட்டர் ஆபரேட்டர், ஒரு மூட்டைப்பூச்சி இப்படி நாலு பேர் கருத்துச் சொல்வது 63

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/73&oldid=824892" இலிருந்து மீள்விக்கப்பட்டது