பக்கம்:சாவி-85.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 போன்ற ஒரு கற்பனை தமிழனில் வெளியான அந்தக் கட்டுரையை ஆசிரியர் கல்கி படித்து ரொம்பவும் ரசித்திருக்கிறார் என்று நண்பர் நாராயணன் மூலம் தெரிந்து கொண்டார். அந்த ஆண்டு தீபாவளியன்று கல்கி அவர்களை மரியாதை நிமித்தம் போய்ப் பார்த்த திரு. பி.பூரீயின் மகன் நாராயணனிடம், சாவி கட்டுரை படித்தேன். ரொம்ப நன்றாக இருக்கிறது. அவரை நான் பாராட்டியதாகச் சொல்லுங்கள் என்று சொல்லி அனுப்பியிருந்தார். சாவிக்கு இதைக் கேட்டதும் மகிழ்ச்சி தாங்கவில்லை. உடனே கல்கியைப் பார்க்கப் போய் விட்டார். அவர் போன சமயம், 'கல்கி உள்ளே எழுதிக் கொண்டிருக்கிறார் என்று சொல்லி அவரை பக்கத்து அறையில் காத்திருக்கச் சொன்னார்கள். அந்த நேரத்தில் ஒரு காகிதத்தை எடுத்து அப்போது மனதில் தோன்றிய ஒரு கற்பனையை பகிரங்கக் கடிதம் (நீலன் சிலை பற்றியது) என்ற தலைப்பில் ஒரு கடிதம் போல் நகைச் சுவையோடு எழுதி உள்ளே அனுப்பினார். கல்கி ஆசிரியர் அதைப் படித்துப் பார்த்துவிட்டு சாவியை உள்ளே வரச் சொன்னார். பேஷ் பேஷ்! உனக்கு ஹ்யூமர் நன்றாக வருகிறது: என்று கூறிப் பாராட்டியதுடன் அப்போதே சாவியை வேலையில் சேர்ந்து கொள்ளலாம் என்றும் சொல்லி விட்டார். அதைக் கேட்டதும் சாவிக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. ஜிவ்'வென்று வானத்தில் பறந்தார். கல்கி அவர்கள் மீது தனக்கிருந்த மரியாதை, ஆதித்தனார் பத்திரிகையில் பெரிய வாய்ப்பு இருக்காது என்று ஏற்கனவே தன்னுள் வளர்ந்திருந்த எண்ணம் எல்லாமாகச் சேர்ந்து கொள்ளவே சரி என்று கல்கியில் உதவி ஆசிரியராகச் சேர்ந்து விட்டார் சாவி. சம்பளம் எழுபத்தைந்து ரூபாய்! ஆனால், கல்கியில் சேர்ந்து விட்ட விஷயத்தை ஆதித்தனார் 64

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/74&oldid=824893" இலிருந்து மீள்விக்கப்பட்டது