பக்கம்:சாவி-85.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. நவகாளி யாத்திரை 'கல்கி'யில் உதவி ஆசிரியர் வேலை கிடைத்ததும் சாவி தமது கனவுகள் ஒவ்வொன்றாக நிறைவேறி வருவதை எண்ணிப் பூரிப்படைந்தார். நாடோடி, வசந்தன் போன்ற எழுத்தாளர்கள் அப்போது 'கல்கி'யில் துணை ஆசிரியர்களாக இருந்தார்கள். அனுபவம் மிக்க அந்த எழுத்தாளர்களுக்கிடையில் சாவி தனது அயராத உழைப்பினாலும், எழுத்துத் திறமையாலும் மெதுவாக ஆனால் உறுதியாக முன்னேறி தமக்கென ஒரு தனியிடத்தைப் பற்றிக் கொண்டார். தான் எழுதிய சிறுகதை ஒன்றை ஒரு வெள்ளிக்கிழமை காலை கல்கியின் பார்வைக்காக மேஜை மீது வைத்து விட்டு வந்தார் சாவி. வியாழக்கிழமை தலையங்கம் எழுதும் நாளாதலால் வெள்ளிக்கிழமைகளில்தான் மற்றவர்கள் எழுதி வைக்கும் கதை, கட்டுரைகளைப் படித்து கல்கி டிக் போடுவது வழக்கம். சாவியின் கதையைப் படித்துவிட்டு, 'இதோ பார் நமக்குப் பல எழுத்தாளர்கள் கதை எழுதி அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். நீயும் அதையே செய்யாதே. உதவி ஆசிரியர்களாக இருப்பவர்கள் கதையைத் தவிர மற்ற அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும். அரசியல் கட்டுரை, பயணக் கட்டுரை, பேட்டிக் கட்டுரை, சினிமா விமர்சனம் இப்படி எத்தனையோ விஷயங்கள் உண்டே, அதெல்லாம் எழுதப் பழகிக் கொள்," என்று கல்கி கூறிய 66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/76&oldid=824895" இலிருந்து மீள்விக்கப்பட்டது