பக்கம்:சாவி-85.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 ஒரு மினி தொடர் கட்டுரையாகவே எழுதிச் சென்னைக்கு அனுப்பி வைத்தார். அந்த நீண்ட கட்டுரையைக் கண்டதும் சாவி சற்று குழம்பிப் போனார். காரணம், அப்போது கல்கியில் ஏற்கெனவே டி.கே.சி. அவர்களின் கம்பர் தரும் காட்சி, ராஜாஜி எழுதும் தொடர், கல்கியின் சரித்திரக் கதை, நவகாளி யாத்திரை என்று ஏகத் தொடர்கள் வெளிவந்து கொண்டிருந்தன. இவ்வளவு தொடர்களுடன் இன்னொரு தொடரா என்பதுதான் சாவியின் குழப்பத்துக்குக் காரணம். கல்கி அவர்களோ, அதை உடனே தொடராக வெளியிடும்படி உத்தரவிட்டிருந்ததால் சாவி தர்மசங்கடத்துக்குள்ளானார். இன்னொரு தொடர் ஓவர்டோஸ்’ ஆக இருக்கும் என்று கருதியதால், அதை கல்கி அவர்களுக்கு ஒரு தந்தி மூலம் சாவி தெரியப்படுத்தினார். இது சற்று அதிகப்பிரசங்கித்தனமாக இருக்குமோ, கல்கி கோபித்துக் கொள்வாரோ என்று அவர் பயந்தது போலவே ஆகிவிட்டது. சற்றும் எதிர்பாராத ஒரு பதில் கல்கியிடமிருந்து வந்தது. 'தொடர்கள் அதிகம் என்றால் உன் தொடரை உடனே நிறுத்திக் கொள்.' தன் தொடரை மேலும் பல வாரங்களுக்கு எழுதத் திட்டமிருந்த போதிலும் ஆசிரியரின் ஆணையை மீற முடியாத நில்ையில், நவகாளி கட்டுரையை அந்த வாரமே அரைகுறையாக முடித்து விடவும் முடியாமல் மேலும் ஒரு வாரம் தொடர்ந்து எழுதிய பிறகே முற்றும் போட்டார். சில நாட்களுக்குப் பின் குற்றாலத்திலிருந்து சென்னை திரும்பிய கல்கி அவர்கள் சாவியைப் பார்த்தபோது பேசாமல் முகம் திருப்பிக் கொண்டார். தன் மீது அவர் கோபமாக இருப்பதை சாவியால் உணர முடிந்தது. அந்த உதாசீனத்தை, அந்த அதிர்ச்சியை சாவியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்படிப்பட்ட இறுக்கமான சூழலில் தொடர்ந்து கல்கியில் எத்தனை நாள் பணியாற்ற முடியும்? கல்கியிலிருந்து 70

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/80&oldid=824900" இலிருந்து மீள்விக்கப்பட்டது