பக்கம்:சாவி-85.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் விலகத் தீர்மானித்து விட்டார் சாவி, அன்று கல்கி அவர்கள் தலையங்கம் எழுதும் நாள். தலையங்கம் எழுதி முடிக்கும் வரை காத்திருந்து சாவி தம் ராஜினாமாக் கடிதத்தைக் கொண்டு போய் நேரிலேயே கொடுத்தார். அதில் புதுப் பத்திரிகை தொடங்கப் போவதாகவும் அதனால் விலகிச் செல்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். கல்கி அதைப் படித்து விட்டு "இது நான் எதிர்பார்த்ததுதான்' என்று சர்வ சாதாரணமாகச் சொல்லி விட்டு அந்த ராஜினாமாக் கடிதத்தின் ஒரு மூலையிலேயே சாவியின் புதுப் பத்திரிகை முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் என்று எழுதியதோடு சாவியின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்கிறேன். அவருக்குச் சேர வேண்டிய தொகையை கணக்குப் பார்த்துக் கொடுத்து விடலாம்” என்று நிர்வாகத்துக்கு ஒரு குறிப்பும் எழுதி அதை சாவியிடமே கொடுத்து அனுப்பி விட்டார். அடுத்த சில மணி நேரங்களில் சாவி கனத்த மனதுடன் கல்கியை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று. 71

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/81&oldid=824901" இலிருந்து மீள்விக்கப்பட்டது