பக்கம்:சாவி-85.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. ராஜாஜியின் அறிவுரைகள் ராஜாஜி கீழ்ப்பாக்கத்திலுள்ள கல்கி அலுவலகத்துக்கு அடிக்கடி வந்து போவதுண்டு. மாலையில் அவர் தம்முடைய தியாகராயநகர் பஸ்லுல்லா சாலை வீட்டுக்குத் திரும்பிச் செல்லும் போது சில நாட்களில் அவர் போகும் காரிலேயே சாவியும் போவதுண்டு. அப்போதெல்லாம் ராஜாஜியுடன் பேசுவதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கும். ஒரு சமயம் சாவி எழுதிய கட்டுரை ஒன்றைப் பாராட்டி "கிருஷ்ணமூர்த்தி மாதிரியே எழுதlங்களே” என்றார் ராஜாஜி. கல்கியை ராஜாஜி கிருஷ்ணமூர்த்தி என்றுதான் குறிப்பிடுவார். அப்போதெல்லாம் கல்கி அவர்களின் எழுத்தில் இருந்த மோகம் காரணமாக அவர் மாதிரியே எழுதிக் கொண்டிருந்தார் சாவி. ராஜாஜியின் பரம பக்தனாகவும் சாவி இருந்தார். அவருடைய செயல்திறமை, புத்தி கூர்மை, பேச்சு, எழுத்து எல்லாவற்றையும் மிகுந்த ஆர்வத்தோடு கவனித்து வியப்பார். ராஜாஜியின் இயல்பான நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்தாலே வாழ்க்கையில் முன்னேறத் தேவையான பல பாடங்கள் நமக்குத் தானாகவே கிடைத்துவிடும்' என்று சொல்லும் சாவி, அதற்கு ஒரு உதாரணத்தையும் இங்கே விவரிக்கிறார்: "ராஜாஜிக்கு எதையும் துல்லியமாகச் செய்ய வேண்டும். நாம் எல்லோரும்தான் சாத்துக்குடி பழம் சாப்பிடுகிறோம். ஆனால், அவர் சாப்பிடுவது ஒரு கவிதையாக இருக்கும். சாத்துக்குடியை 72

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/82&oldid=824902" இலிருந்து மீள்விக்கப்பட்டது